அனுஷ்காவுக்கு குறையாத மவுசு.. காதி படத்தின் ஓடிடி உரிமம் இவ்வளவுக்கு வியாபாரமா?

சென்னை: தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் அனுஷ்கா. அழகும், திறமையும் ஒருசேர கொண்ட அவர் பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்தார். அதனையடுத்து தொடர்ந்து நடித்த அவருக்கு வாய்ப்புக்ள் குறைந்தன. இதனால் சில காலம் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அவர் தற்போது காதி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் 2005ஆம் ஆண்டு சூப்பர் படத்தில் அறிமுகமான அனுஷ்கா அருந்ததி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பேய் படமான அருந்ததியில் அனுஷ்காவின் நடிப்பு பட்டையை கிளப்பியது. அதுமட்டுமின்றி ஹீரோவுக்கு சமமான ரெஸ்பான்ஸும் கிடைத்தது. மேலும் அறிமுகமான சில வருடங்களிலேயே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு பாராட்டும் கிடைத்தது.

பாகுபலி அனுஷ்கா: இதனையடுத்து தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வர ஆரம்பித்தார். தமிழ், தெலுங்கில் தனித்தனி மேனேஜரை வைத்திருக்கும் அளவுக்கு பிஸியான நடிகையாக திகழ்ந்தார் அனுஷ்கா. தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்தார். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் இந்திய அளவில் ஹிட்டடித்தது. இதனையடுத்து மேற்கொண்டு பிரபலமான அனுஷ்கா ரசிகர்களால் தேவசேனா என்று அழைக்கப்பட்டார். அதனையடுத்து தொடர்ந்து நடித்த அவருக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்தன.

Information about the OTT of Anushka s film Ghaati has been released
Photo Credit:

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி: சிறந்த நடிப்பு, அழகு, கவர்ச்சி என அத்தனையும் இருந்த அனுஷ்காவுக்கு பட வாய்ப்புகள் குறைந்தது அவரது ரசிகர்க்ளுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. சில காலம் ஒதுங்கியிருந்த அவர் மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்தார். அந்தப் படம் சிறந்த ஃபீல் குட் படமாக அமைந்தது. மேலும் அனுஷ்காவின் நடிப்பை பார்த்த ரசிகர்களோ, இன்னமும் தலைவியின் ஃபார்ம் குறையவில்லை என்று மகிழ்ச்சியடைந்தார்கள்.

காதி அனுஷ்கா: மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படம் கொடுத்த ரெஸ்பான்ஸ் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது. இதன் காரணமாக தான் தேர்ந்தெடுக்கும் கதைகளில் தெளிவாகவும் நிதானமாகவும் இருக்கிறார். அந்தவகையில் தன்னை வைத்து வானம் படத்தை இயக்கிய் கிரிஷ் இயக்கத்தில் மீண்டும் நடித்திருக்கிறார். படத்துக்கு காதி என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் விக்ரம் பிரபு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

ஓடிடி உரிமம்: படமானது ஜூலை 11ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் காதி படத்தின் ஓடிடி வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமம் 36 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. எந்த ஓடிடி நிறுவனம் படத்தை வாங்கியிருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலையாளத்தில் அனுஷ்கா: மேலும், தெலுங்கு திரையுலகில் ஒரு ஹீரோயினின் படம் இவ்வளவுக்கு ஓடிடி உரிமம் விற்கப்பட்டது இந்தப் படம்தான் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழ், தெலுங்கில் மட்டும் இதுவரை நடித்துவந்த அவர்; இரண்டாவது இன்னிங்ஸில் மலையாளத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். அதன்படி அப்படத்துக்கு காத்தனார் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X