இயற்கையே மன அமைதிக்கான அற்புத நுழைவாயில்.. நடிகை இனியா!
சென்னை :மலையாளம்,தமிழ்,கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபலமாக இருப்பவர் நடிகை இனியா.
தமிழில் வாகை சூடவா,மௌன குரு, யுத்தம் செய் என பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
காஃபி மற்றும் கலர்ஸ் ஆகிய படங்களில் நடித்து வரும் இனியா யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு இயற்கை மன அமைதிக்கான அற்புத நுழைவாயில் என கூறியுள்ளார்.

நற்பெயரை பெற்றுத்தந்தது
மலையாளத்தில் வெளியான சாய்ரா திரைப்படத்தில் நடித்து அறிமுக படுத்தப்பட்ட நடிகை இனியா தமிழில் பாடகசாலை மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து யுத்தம் செய், வாகை சூடவா, மௌன குரு என தொடர்ந்து தரமான கதைகளில் நடித்து தமிழ் ரசிகர்களையும் ஈர்த்து வந்தார். குறிப்பாக வாகை சூடவா இவருக்கு மிகப்பெரிய நற்பெயரை பெற்றுத்தந்தது சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.

கொஞ்ச காலம் மலையாள
கதாநாயகியாக வலம் வரும் போதே சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கிய இனியாவிற்கு அதைத் தொடர்ந்து அதேபோன்ற கதாபாத்திரங்கள் வர தொடங்க ஆள விடுங்கடா சாமி இனி சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடுத்து கொஞ்ச காலம் மலையாள சினிமா பக்கம் ஒதுங்கியவர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் பொட்டு மூலம் கம் பேக் கொடுத்தார்.
Recommended Video

ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம்
தமிழ் மலையாளம் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் இனியா இப்பொழுது தமிழில் காஃபி மற்றும் கலர்ஸ் , கன்னடத்தில் துரோணா உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். சில படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போடுகிறார்.

இயற்கை மன அமைதிக்கான
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளமுடியாமல் நடிகைகள் அனைவரும் வீட்டிலேயே உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை இனியா மூச்சுப் பயிற்சி செய்யும் யோகா புகைப்படத்தை வெளியிட்டு இயற்கை மன அமைதிக்கான அற்புத நுழைவாயில் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











