பாரதிராஜா கண்டிப்பா கூப்பிடுவார்... நம்பிக்கையுடன் இனியா

By Mayura Akilan

சென்னை: அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தில் நடிக்க முடியாமல் போனாலும் கூட அடுத்த படத்தில் கண்டிப்பாக கூப்பிடுவதாக பாரதிராஜா கூறியுள்ளார். நிச்சயம் கூப்பிடுவார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறியுள்ளார் இனியா.

ராதிகாவுக்குப் பிறகு இனியாதான்

ராதிகாவுக்குப் பிறகு இனியாதான்

வாகை சூடவா படத்தில் கிராமத்து பாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டினையும் பெற்றவர் நடிகை இனியா. ராதிகாவுக்கு பின்னர் கிராமத்து வேடத்திற்கு ஏற்ற நடிகை இனியாதான் என்று இயக்குநர் சிகரம் பாரதிராஜாவே பாராட்டிய நடிகை இவர்.

கைநழுவிய அன்னக்கொடி

கைநழுவிய அன்னக்கொடி

ஆனால் அவருடைய அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது பற்றி வருத்தத்தில் இருக்கிறார்.

தமிழ் பாடும் மலையாளக் குருவி

தமிழ் பாடும் மலையாளக் குருவி

இனியாவின் பிறந்த ஊர் திருவனந்தபுரம். 2005ல் மிஸ் திருவனந்தபுரம் பட்டம் வாங்கியிருக்கிறாராம். மலையாளப்படங்களில் சிறுவயதில் இருந்தே நடித்த அனுபவம் அதிகம் இருக்கவே இங்கே பிக் அப் ஆகிவிட்டார்.

முதல் படம் யுத்தம் செய்…

முதல் படம் யுத்தம் செய்…

இனியாவின் முதல் தமிழ் படம் மிஸ்கின் இயக்கிய யுத்தம் செய் இதில் சேரனின் தங்கையாக நடித்திருந்தார். நிறைய பேருக்கு அவரை அடையாளம் தெரியவில்லை.

புகழ் தந்த வாகை சூடவா…

புகழ் தந்த வாகை சூடவா…

வாகை சூடவா படத்திற்காக கதாநாயகி தேடிய போது 16 பேரை வேண்டாம் என்று சொல்லிவிட்டு இனியாவை தேர்வு செய்தார்களாம். நகரத்து மங்கையை கிராமத்து மதியாக மாற்றிய பெருமை இயக்குநர் சற்குணத்தையே சேரும்.

4 மொழிகளில் கிராமத்து வேடம்

4 மொழிகளில் கிராமத்து வேடம்

வாகை சூடாவா படத்தின் மூலம் இப்போது மலையாளத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இனியா. அதேபோல் மலையாளம், கன்னடம், தெலுங்கிலும் கிராமத்து வேடம் கிடைத்துள்ளதாம் இனியாவிற்கு.

கம்பங்களியும் காடைக்கோழியும் …

கம்பங்களியும் காடைக்கோழியும் …

அம்மாவின் கைபேசி படத்தில் நடித்த போது இனியாவிற்கு கிராமத்து பெண் ஒருவர் காடைக்கோழியும், கம்மங்களியும் சமைத்து கொடுத்தாராம்.

பாரதிராஜா படத்தில்

பாரதிராஜா படத்தில்

அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தில் அமீருடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானர் இனியா. அமீர் விலகவே இனியாவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தன்னுடைய அடுத்த படத்தில் கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் என்று கூறியிருக்கிறாராம் பாரதிராஜா. நம்பிக்கையுடன் காத்திருக்கிறார் இனியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X