நட்டநடு ராத்திரியில் லாரியில் குத்தாட்டம் போடும் இனியா

By Mayura Akilan

வாகை சூடவா நாயகி இனியா, விமல் படத்தில் குத்தாட்டம் போட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமல், ப்ரியா ஆனந்த் ஜோடி சேர்ந்திருக்கும் படம் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா. இப்படத்தில் இன்னொரு ராஜாவாக சூரி நடிக்கிறார்.

இப்படத்தில் இடம்பெறும் குத்துப் பாடலுக்கு தெலுங்கு பட உலகில் லுங்கியில் நடனமாடி சர்சைக்குள்ளான நடிகை சன்னி லியோன் ஆடுவார் என முதலில் தகவல் வெளியானது. ஆனால் நடிகை இனியா அந்தப் பாடலுக்கு நடனமாடப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சுமிமேனன் பாடல்

லட்சுமிமேனன் பாடல்

இயக்குனர் கண்ணன் இயக்க,இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகை லட்சுமிமேனன் குத்துப்பாடல் ஒன்றினை பாடியுள்ளார். இதற்கு முன்பு, ஸ்ருதிஹாசன், ரம்யா நம்பீசன், சிவகார்த்திகேயன் என பல நடிகர்-நடிகைகளை பாட வைத்த இமான், இந்த படத்தில் முதன்முறையாக லட்சுமி மேனனையும் பாட வைத்திருக்கிறார்.

சன்னிலியோன் ஆடுறாக…

சன்னிலியோன் ஆடுறாக…

லட்சுமிமேனன் பாடிய குத்துப் பாடலுக்கு வடகறி படத்தில் ஜெய்யுடன் குத்தாட்டமாடிய பாலிவுட் கவர்ச்சிப்புயல் சன்னி லியோன் நடனமாடுவதாக செய்திகள் பரவி வந்தது.

நீது சந்திரா ஆடுறாக…

நீது சந்திரா ஆடுறாக…

பின்னர், அப்பாடலுக்கு சன்னி லியோன் ஆடவில்லை என்றும் அவருக்குப் பதிலாக நீது சந்திரா தான் ஆடுகிறார் என்றும் கூறப்பட்டது. ஆனால், தற்போது சன்னி லியோனுமில்லை, நீது சந்திராவும் இல்லையாம்.

வாகை சூடப்போகும் இனியா

வாகை சூடப்போகும் இனியா

வாகை சூடவா படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்த இனியா குத்தாட்டமாடுவதாக இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

தலை சுற்றவைத்த சம்பளம்

தலை சுற்றவைத்த சம்பளம்

சன்னிலியோன், நீதுசந்திரா ஆகியோர் கேட்ட சம்பளத்தை தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கொடுக்க தயங்கியதால்தான் இந்த மாற்றம் என கூறப்படுகிறது.

லாரியில் ஆடும் இனியா

லாரியில் ஆடும் இனியா

சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட ஒரு லாரியில் இனியா மட்டும் தன்னந்தனியாக நடனம் அமைவது போன்ற காட்சிகளை படமாக்க இயக்குனர் கண்ணன் முடிவு செய்துள்ளார்.

கலக்கல் நடனம்

கலக்கல் நடனம்

இதற்கு அலங்கரிக்கப்பட்ட லாரி தயாராக இருப்பதாகவும், இன்னும் இரண்டு நாட்களில் இந்த பாடலில் படப்பிடிப்பு தொடங்கி மூன்று நாட்களில் இந்த பாடலின் படப்பிடிப்பை முடிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இப்பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைக்கிறார்.

இமேஜ் பாதிக்காது

இமேஜ் பாதிக்காது

சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பு, கேரளாவில் தனது சகோதரியுடன் இணைந்து நடன நிகழ்ச்சிகள் நடத்தி வந்தவர்தான் இனியா. அதனால் அவருக்கு இந்த பாடலில் நடனமாடுவது ஒன்றும் இமேஜை பாதிக்கக்கூடிய விசயமாக தெரியவில்லையாம்.

விஷாலுடன் குத்தாட்டம்

விஷாலுடன் குத்தாட்டம்

ஏற்கனவே நான் சிகப்பு மனிதன் படத்தில் விஷாலுடன் குத்தாட்டம் போட்ட இனியா இப்போது விமல், சூரியுடன் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் குத்தாட்டம் போட தயாராகிவிட்டார்.

அயிட்டம் பாடலுக்கு ஓகேதான்

அயிட்டம் பாடலுக்கு ஓகேதான்

தொடர்ந்து கதாநாயகி அல்லாத வேடங்கள், அயிட்டம் பாடலுக்கு ஆடுவது என்றாலும் நான் ஓகே என்று தொடை தட்டுகிறார் இனியா.

விமல் கொடுத்த டிப்ஸ்

விமல் கொடுத்த டிப்ஸ்

விமலுடன் வாகை சூடவா படத்தில் நடித்தபோது எங்களுக்கிடையே நல்லதொரு புரிதல் இருந்தது. அவர் என்னை விட சீனியர் நடிகர் என்பதால் சில டிப்ஸ்களை பெற்றும் நடித்தேன். தொடர்ந்து அவருடன் நடிக்க வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்தேன்.

மேடு பள்ளம் சகஜம்தனே

மேடு பள்ளம் சகஜம்தனே

சில படங்களின் தோல்வி எனது மார்க்கெட்டை சரித்து விட்டது. இருப்பினும், சினிமாவில் இதுபோன்ற மேடு பள்ளங்கள் வருவது இயல்பு.

மீண்டும் டூயட் பாடுவேன்

மீண்டும் டூயட் பாடுவேன்

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் விமலுடன் குத்தாட்டமாடினாலும், எதிர்காலத்தில் மீண்டும் அவருடன் டூயட் பாடுவேன் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் இனியா.
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது இனியாவிற்கு தெரியாதா என்ன?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X