லிப் லாக் அடிக்க அவர்தான் காரணம்.. இது எவ்வளவோ மேல்.. பட விழாவில் ஓபனாக பேசிய இனியா
சென்னை: கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் இனியா. மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் இனியா. பிறகு தமிழில் பாடகசாலை, யுத்தம் செய் ஆகிய படங்களில் நடித்து தமிழில் அறிமுகமானார். இரண்டு படங்களிலுமே அவரது நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. தொடர்ந்து தமிழில் நடித்துவந்த அவருக்கு திடீரென வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இப்போது அவர் ஸ்வீட்டி நாட்டி கிரேஸி படத்தில் நடித்திருக்கிறார்.
மலையாளத்தில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான சைரா படத்தில் நடிகையாக அறிமுகமானவர் இனியா. அந்தப் படத்தைத் தொடர்ந்து டைம், த்ரில், தலாமர்மரங்கல் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்தார். அதற்கு பிறகு பாடகசாலை என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தப் படத்துக்கு பிறகு மிஷ்கின் இயக்கத்தில் உருவான யுத்தம் செய் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களிலுமே இனியாவின் நடிப்பை பலரது கவனத்தை ஈர்த்தது.

கலக்கிய இனியா: இனியாவின் கரியரிலேயே வாகை சூட வா படத்துக்கு தனியிடம் உண்டு. சற்குணம் இயக்கி விமல் ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படத்தில் சீன் பை சீனாக இனியா ஸ்கோர் செய்தார். குறிப்பாக சரசர சார காத்து பாடலில் அவர் கொடுத்த ஒவ்வொரு முக பாவனையும் ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது. அட செமயா நடிக்கிறாங்களே ப்பா என்று பேசவும் ஆரம்பித்தனர். கண்டிப்பாக தமிழில் இவருக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்று ஆரூடமும் கூறப்பட்டது.
பிஸியான இனியா: அதனையடுத்து தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்துவருகிறார். அவர் பல படங்களில் பிஸியாக தொடர்ந்து நடித்துவந்தாலும் சொல்லிக்கொள்ளும்படியான ஹிட் எதுவும் கிடைக்கவில்லை. இடையிடையே கிளாமர் ரோலையும் அவர் ஏற்று நடித்து பார்த்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றியோ திருப்புமுனையோ இன்னமும் வரவில்லை என்பதுதான் எதார்த்த உண்மை. தமிழில் அவருக்கு கடைசியாக சொல்லிக்கொள்ளும்படியாக ரைட்டர் படம் வெளியானது.
ஸ்வீட்டி நாட்டி கிரேஸி: இநிந்லையில் இனியா தற்போது ஸ்வீட்டி நாட்டி கிரேஸி படத்தில் நடித்திருக்கிறார். அதில் அவருடன் ரவி மரியா, சிங்கம் புலி, ராதா, திரிகுன் உள்ளீட்டோர் நடித்திருக்கிறார்கள். அந்தப் படத்தின் விழாவில் பேசிய இனியா, “ஸ்வீட்டி நாட்டி கிரேஸி படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷலான் ஒன்று. என் வாழ்க்கையில் தொடர்ந்து இப்படியான நல்ல விஷயங்கல் நடப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. படத்தில் நான் நந்தினி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன். மூன்று ஹீரோயின்கள் இதில் இருக்கிறோம்.
தோள்பட்டையில் காயம்: என் ஷோல்டரில் காயம் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி வேறு சில பிரச்னைகளால் லேசர் சிகிச்சையையும் செய்துவருகிறேன். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகள் நடிகர்கள் பல இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கிறார்கள். இங்கு திறமை இருந்தால் ஏதேனும் ஒரு கேரக்டரில் நடித்துக்கொண்டே இருக்கலாம். கிளாமர் ஹீரோயினாக இருந்து திரைத்துறையில் காணாமல் போவதற்கு இது எவ்வளவோ மேல்.
லிப் லாக் ஏன்?: படத்தில் நான் லிப் லாக் காட்சியில் நடித்திருக்கிறேன். அதற்கு இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர்தான் காரணம். ஏனெனில் அவர் ஒரு பெண். அவருடன் பணியாற்றியது சந்தோஷம். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஒரு பெண்ணாக இருந்ததால்தான் லிப் லாக் காட்சியில் நடித்தேன். அதுமட்டுமின்றி சில நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருக்கிறேன்” என்றார்.


Click it and Unblock the Notifications











