Don't Miss!
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- News
தீய சக்தி திமுகவை வீழ்த்த வலிமையான அதிமுக..ஓபிஎஸ் இபிஎஸ் ஒற்றுமை அவசியம்..சொல்கிறார் சி.டி.ரவி
- Finance
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க.. இனியும் குறையுமா?
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
திரும்பவும் வெயிட்டுப் போடும் இஞ்சி இடுப்பழகி: இப்போ இந்த ரிஸ்க் தேவைதானா?: ரசிகர்கள் ஷாக்கிங்!
ஐதராபாத்: ரசிகர்களின் கனவுக் கன்னியான அனுஷ்கா, தமிழ், தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
மாதவனுடன் 'ரெண்டு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான அனுஷ்கா, நீண்ட இடைவேளைக்குப் பின்னரே கோலிவுட்டில் பிஸியாக நடிக்கத் தொடங்கினார்.
அனுஷ்கா இதுவரை ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என தமிழின் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு அசத்தியுள்ளார்.
திருச்சிற்றம்பலம் படத்துக்கு ஆடியோ லான்ச்.. ஒரே மேடையில் அசத்தவுள்ள அனிருத் – தனுஷ்!

சூப்பர் அறிமுகம்
தெலுங்கில் 2005ல் வெளியான 'சூப்பர்' படத்தில் நாகர்ஜுனுடன் இணைந்து நடித்த அனுஷ்கா, அடுத்ததாக ராஜமெளலி இயக்கத்தில் ரவிதேஜாவுடன் 'விக்ரமார்குடு' படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். அதேபோல், தமிழில் மாதவன் நடிப்பில் 2006ம் ஆண்டு வெளியான 'ரெண்டு' படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் அனுஷ்காவிற்கு நல்ல மார்க்கெட் உருவாகியது.

அருந்ததியாக மிரட்டல்
ஆரம்பம் முதலே கவர்ச்சியான நடிப்பில் ரசிகர்களை கிறங்கடித்து வந்த அனுஷ்கா, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்கவும் காத்திருந்தார். அவர் நடித்த பெரும்பாலான படங்களில், அனுஷ்காவின் கவர்ச்சி மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், அவரது நடிப்பில் வெளியான 'அருந்ததி' திரைப்படம், மெகா வசூல் சாதனை படைத்து பட்டையைக் கிளப்பியது. அனுஷ்காவின் மிரட்டலான நடிப்பை கண்ட ரசிகர்கள், மிரண்டு தான் போய்விட்டனர்.

பாகுபலி பிரபாஸுடன் காதல்
இதனிடையே டோலிவுட் டார்லிங் பிரபாஸுடன் அடுத்தடுத்து ஜோடி சேர்ந்தார் அனுஷ்கா. குறிப்பாக அவர்களது நடிப்பில் வெளியான மிர்ச்சி, பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்து அசத்தின. அதேநேரம் பிரபாஸுக்கும் அனுஷ்காவுக்கு இடையே காதலும் மலர்ந்தது. இருவரும் ஜோடியாக வலம்வந்த ஏராளமான போட்டோக்கள், சோஷியல் மீடியாக்களில் வைரலாகின.

காதல் கசக்குதைய்யா
பல வருடங்களாக தொடர்ந்த பிரபாஸ், அனுஷ்கா காதல் திருமணத்தில் முடியும் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், இருவருமே இப்போது பிரேக் அப் மோடில், சைலண்ட்டாக ஆளுக்கொரு திசையில் சென்று கொண்டிருக்கின்றனர். இதனிடையே, தமிழில் வேட்டைக்காரன், லிங்கா, சிங்கம், என்னை அறிந்தால், என டாப் ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு வந்தார் அனுஷ்கா.

இஞ்சி இடுப்பழகி
கேரக்டர்களுக்காக உடல் எடையை கூட்டி குறைத்து நடிப்பதில் நடிகர்கள் மட்டுமே ஆர்வம் காட்டி வந்தனர். அவர்களுக்கு எல்லாம் சவால் விடும் வகையில், தெலுங்கில் 'சைஸ் ஜீரோ' என்ற பெயரிலும், தமிழில் 'இஞ்சி இடுப்பழகி' என்ற டைட்டிலுடன் வெளியான படத்தில், அனுஷ்கா சிறப்பான சம்பவம் செய்திருந்தார். ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்த அனுஷ்கா, செம்ம வெயிட் போட்டு, பப்ளியாக நடித்து ஆச்சரியப்படுத்தினார்.

திரும்பவும் ரெடி
இந்த நிலையில், மகேஷ் இயக்கவுள்ள புதிய படத்தில் கமிட் ஆகிருக்கும் அனுஷ்கா, திரும்பவும் ஒரு ரிஸ்க் எடுக்க ரெடியாகிவிட்டாராம். அதாவது இந்தப் படத்துக்காக 20 கிலோ வரை வெயிட்டை அதிகரிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. கதையின் தேவைக்காக அனுஷ்கா மீண்டும் அவரது எடையை கூட்டவுள்ளது, ரசிகர்களுக்கு ஷாக்கிங் அப்டேட்டாக அமைந்துள்ளது. சில ரசிகர்களோ இந்த வயசுல அனுஷ்காவுக்கு இதெல்லாம் தேவைதானா என்றும் கூறி வருகின்றனர்.