முஸ்லிமாக பிறந்து.. கிறிஸ்டியனாக மாறிய ஸ்டார் நடிகரின் மனைவி.. இன்று பல கோடிக்கு சொந்தக்காரி!
சென்னை: காதல் என்று வந்துவிட்டால், கண்ணும் தெரியாது மண்ணும் தெரியாது என்று சொல்வார்கள். அப்படி சினிமாவில் பலர் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்ட கதை உண்டு. இதில் சில ஜோடிகள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். சிலர் தடம் தெரியாமல் பிரிந்துவிட்டனர். ஆனால், திருமணமாகி 25வருடம் ஆன போதும், கணவர் மீது அதே காதலுடன் இருக்கும் நடிகையை பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.
அந்த நடிகை வேறு யாரும் இல்லை நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினி தான். இவர் 1979 ஆண்டு பிறந்தார். இவரது தந்தை ஒரு முஸ்லிம், தாய் கிறிஸ்டீன். இருவரும் வேறு வேறு மதமாக இருந்த போதும், அனைவரும் கிறிஸ்டீன் மதத்தை பின் பற்றினார். ஷாலினியின் அப்பாவிற்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்துள்ளது. இந்த ஆசையால் தான், கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்தார். தொடர்ந்து சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என முயற்சி செய்து வந்த அவருக்கு வாய்ப்பு வராமல், மகள் ஷாலினிக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. வாய்ப்பு யாருக்கு வந்தால் என்ன, அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தனது மகளை சினிமாவில் நடிக்க வைத்தார்.

பேபி ஷாலினி: ஷாலினி முதல் முறையாக நான்கு வயதில் மலையாளத்தில் வெளியான 'என்டே மாமாட்டிக்குட்டியம்மாக்கு' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான கேரள அரசின் விருதை பெற்றார். அதைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என பல படத்தில் நடித்து பெயர் எடுத்தார். மற்ற மொழிகளில் ஏராளமான படத்தில் நடித்தாலும், பாலிவுட்டில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்தார். அனில் கபூரின் ரக்வாலா என்ற படத்தில் ஷபானா ஆஸ்மிக்கு மகளாக நடித்தார்.
காதல் வளர்ந்த கதை: அதன் பின் சில ஆண்டு காலம் படிப்பில் கவனம் செலுத்தி வந்த ஷாலினி சினிமாவில் சில ஆண்டுகள் தலைகாட்டாமல் இருந்தார். இதையடுத்து, பருவ வயதை அடைந்த ஷாலினி மலையான படத்தில் ஹீரோயினாக நடித்தார். அவர் நடித்த முதல் படமே பல நாட்கள் தியேட்டரில் ஓடி வசூலை அள்ளியது. அதைத் தொடர்ந்து தமிழில், விஜய்யுடன் காதலுக்கு மரியாதை, அஜித்துடன் அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே, பிரியாத வரம் வேண்டும் போன்ற படத்தில் நடித்தார். இதில் அலைபாயுதே படத்தில் மாதவனுடன் மிகவும் நெருக்கமாக நடித்து இருந்தார். இந்த படம் தியேட்டரில் பல நாட்கள் ஓடி வசூலை அள்ளியது. குறுகிய காலத்திலேயே தனக்கு என்று தனி இடத்தை பிடித்தார் ஷாலினி. இவர் அஜித்துடன் அமர்க்களம் படத்தில் சேர்ந்து நடித்த போது, இருவரும் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

பல முறை கேட்டார்: இருவருக்கும் எப்படி காதல் வந்தது என்பதை படத்தின் இயக்குநர் யூடியூப்பிற்கு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதில், அமர்க்களம் படத்தில் ஷாலினி முதன் முதலாக "சொந்தக்குரலில் பாட" என்ற பாடலை பாடியிருந்தார். அந்தப்பாடலை நான் அஜித்துக்கு போட்டுக் காட்டினேன். அந்த பாட்டு அவருக்கு ரொம்ப பிடித்து விடவே தொடர்ந்து ரிப்பீட் மோடில் அந்த பாட்டை கேட்டுக்கொண்டே இருந்தார். அதுமட்டுமில்லாமல் படத்தில் ஒரு காட்சியில் கத்தியை வீசும் போது அது ஷாலினியின் கையில் பட்டு ரத்தம் கொட்டி உள்ளது. இதைப்பார்த்து ஒட்டுமொத்த படக்குழுவும் பதறிவிட்டது. அப்போது, அஜித் ஓடி வந்து ஷாலினிக்கு முதல் உதவி செய்தார். அப்போது தான் ஷாலினிக்கும் அஜித் மீது காதல் பூ பூத்தது. அதற்குப் பிறகு இருவரும் நெருங்கி பழக ஆரம்பித்தனர். தனக்கான பெண் இவள் தான் என்று அறிந்த அஜித், நேராக ஷாலினியிடம் உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்று சொல்ல, ஷாலினியும் அதற்கு ஓகே சொல்லிவிட்டார்.
எடையை குறைத்தார்: இதையடுத்துத்தான் அஜித் ஷாலினியின் திருமணம் பெற்றோரின் சம்மதத்துடன் நடந்தது. திருமணத்திற்கு பின் சினிமாவில் தலைகாட்டாமல் இரண்டு குழந்தைகளையும் வளர்ந்த ஆளாக்கி உள்ளார். திருமணத்திற்கு பிறகு தான் அஜித்திற்கு யோகம் அடித்தது என்று சொல்ல வேண்டும், அடுத்தடுத்து வெற்றிப்படத்தை கொடுத்து இன்று தமிழ் சினிமாவில் பலரும் கொண்டாடும் ஸ்டார் நடிகராக இருக்கிறார். அண்மையில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி நல்ல வசூலை அள்ளியது. அந்த படத்தில் பலவிதமான கெட்டப்பில் வந்து மாஸ் காட்டிய அஜித், உடல் எடையை வெகுவாக குறைத்து இருந்தார். உடல் உடை குறைத்தது குறித்து அண்மையில் பேட்டி அளித்திருந்த அஜித், 8 மாதத்தில் மட்டும் 42 கிலோ எடையை குறைத்தேன். மீண்டும் ரேஸில் கலந்து கொள்ள முடிவு செய்த போது, இந்த முடிவை எடுத்தேன். இதற்காக அசைவத்தை முழுமையாக தவிர்த்து விட்டு, மொத்தமாக சைவமாக மாறிவிட்டேன் என்று கூறியிருந்தார்.
பத்ம விருது: கார் ரேஸில் ஈடுபாடு கொண்ட அஜித் குமார், இளம் தலைமுறையினரை ஊக்கப்படுத்தும் விதமாக சர்வதேச கார் பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக அஜித்குமார் ரேசிங்கை உருவாக்கினார். இந்தப் பந்தயத்தில் கலந்துகொள்ள போர்ஷே ஜிடி3 ஆர்.எஸ் என்ற சொகுசு காரை வாங்கி வெள்ளை, சிவப்பு, மஞ்சள் வண்ணத்தில் பிரத்யேகமாகத் தயார் செய்தார் அஜித். கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற 922 போர்ஷே கார் பிரிவில், அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இதை அஜித்தின் ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடினார்கள். அதுமட்டுமில்லாமல் மத்திய அரசு 2025 ஆம் ஆண்டுக்கான கலைத்துறையில் சிறந்து விளங்கிய நடிகர் அஜித்துக்கு பத்ம விருது வழங்கி கொளரவித்தது. இந்த விருதை அஜித் தனது மகன், மகளும், மனைவி ஷாலினியுடன் சென்று பெற்றுக்கொண்டார்.
நல்ல குடும்ப தலைவி: அஜித் மற்றும் ஷாலினி இடையே காதல் உருவானதற்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. இருவரும் விளையாட்டு பிரியர்கள். ஷாலினி பேட்மிண்டன் ஈடுபாடு கொண்டவர். இதை தெரிந்து கொண்டஅஜித் தனது மனைவிக்காக வீட்டிலேயே ஒரு பேட்மிண்டன் கோர்ட்டை கட்டியுள்ளார். தற்போது அஜித், ஒரு படத்திற்கு 05 முதல் 165 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். அஜித் குமாரின் நிகர மதிப்பு ரூ.196 கோடி இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது அனைத்துக்கும் சொந்தக்காரியாக ஷாலினி தான் இருக்கிறார். முஸ்லிமாக பிறந்து , கிறிஸ்துவாக வளர்ந்து, தனது காதலுக்காக பிராமணரான அஜித்தை திருமணம் செய்து கொண்டு, நல்ல ஒரு குடும்ப தலைவியாக ஜோலித்து வருகிறார் ஷாலினி. இந்த தகவலை ஆங்கில பத்திரிக்கையான india.com வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











