twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகை குஷ்பு மீதான வழக்கை விசாரிக்க இடைக்கால தடை!

    By Shankar
    |

    Kushboo
    மதுரை: தேர்தல் விதியை மீறியதாக நடிகை குஷ்பு மீது தொடர்ந்த வழக்கை கீழ்கோர்ட்டு விசாரிக்க இடைக்கால தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் தேர்தல் விதிகளுக்கு புறம்பாக அவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக ஆண்டிப்பட்டி போலீசார் நடிகை குஷ்பு மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை ஆண்டிப்பட்டி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது நடிகை குஷ்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தார். இந்த வழக்கின் விசாரணை அடுத்த மாதம்(ஏப்ரல்) 10-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இடைக்கால தடை

    இந்த நிலையில் அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், கீழ்கோர்ட்டு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகை குஷ்பு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டி.சுதந்திரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

    மனுவை விசாரித்த நீதிபதி, நடிகை குஷ்பு மீதான வழக்கை கீழ்கோர்ட்டு விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் நடிகை குஷ்பு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளித்தும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

    நடிகை குஷ்பு மீது தேர்தல் விதிமுறையை மீறியதாக நத்தம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. அந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Read more about: kushboo court குஷ்பு
    English summary
    The Madurai branch of Madras High Court ordered to the lower court for an interim stay on the election violation cases against Kushboo.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X