டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி சண்டை போடுவோம்.. எங்க காதலுக்கு மொழியே தேவை இல்லை.. நாடோடிகள் அபிநயா
சென்னை: நாடோடிகள் பட புகழ் நடிகை அபிநயா, முன்னதாக இவர் நடிகர் விஷாலை காதலித்து வருவதாகக் கிசுகிசுக்கப்பட்டது. பின்னர், இதற்கு மறுப்பு தெரிவித்த அபிநயா நீண்ட நாள் நண்பரை காதலித்து வருவதாகவும், தவறான செய்திகளை பரப்பாதீர்கள் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் தனது காதலர் கார்த்திக்கை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், இருவரும் அளித்திருக்கும் பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் அபிநயா. இதைத்தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் நல்ல நல்ல கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். அண்மையில் மலையாளத்தில் பனி என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அபிநயா நடித்த காட்சிகள் குறித்து சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் கிளம்பின. இதற்கு நிதானமாக பதில் அளித்த அபிநயா அதுபோன்ற காட்சிகளில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால், இயக்குநர் அதுபோன்ற காட்சியை எழுதியிருக்கிறார். இந்த கதைக்கு அது தேவைப்பட்டதால் நடித்தேன். ஒரு கதைக்கு என்ன தேவைப்படுகிறதோ அந்தவாறு நடித்து கொடுக்க வேண்டியது என் கடமை என தெரிவித்திருந்தார்.

காதல் திருமணம்: மார்க் ஆண்டனி படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அபிநயா நடித்திருப்பார். இதைத்தொடர்ந்து விஷாலை காதலிப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அபிநயா தவறாக யார் மீதும் பலி போடாதீர்கள். நான் எனது நீண்ட கால நண்பர் கார்த்திக்கை காதலித்து வருவதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து இருவருக்கும் அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது. இதில், இயக்குநர், சமுத்திரக்கனி மற்றும் சசிகுமாரும் இணைந்து அவரது திருமணத்திற்கு சென்று அபிநயாவை வாழ்த்தினர். அப்போது நடிகை அபிநயா சமுத்திரக்கனி காலில் விழுந்து வாழ்த்து பெறு்ம் காட்சிகளும் வெளியாகின. இதைத்தொடர்ந்து நடிகை அபிநயா அவரது கணவர் கார்த்திக்கும் இணைந்து பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருக்கின்றனர்.
ஸூட்டிங் மாதிரி இருந்தது: திருமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அபிநயா, என்னால் நம்பவே முடியவில்லை. எங்க திருமணம் ஒரு படத்திற்கான சூட்டிங் மாதிரி இருந்தது. சீக்கிரமே முடிந்து விட்டது போல் ஒரு பீல் இருக்கு. ஆனால், மனதுக்கு நிறைவான மகிழச்சி இதுதான் என அபிநயா தெரிவித்தார். மேலும், திருமணத்திற்கு பிறகு இருவரும் சேர்ந்து அளிக்கும் முதல் பேட்டி இது என்றும் அபிநயா தெரிவித்தார். அப்போது எனக்கும் கார்த்திக்கிற்கும் இது புதுசா இருக்கு. திருமணத்திற்கு முன்பு நான் தனியாக எனக்கு பிடித்த பெண்ணாக இருந்தேன். கல்யாணத்துக்கு அப்புறம் இருவரும் ஒன்னா இருக்கிறதை அவரிடம் சொல்லனும். நிறைய ஷேர் பண்ணனும். என் கணவருக்கு நிறைய விஷயம் தெரியாது. இந்த நேரத்தில் என் அம்மாவை ரொம்ப மிஸ் பன்றேன். அவங்க கிட்ட நிறைய ஷேர் பண்ணனும் ஆசையாக இருப்பதாக அபிநயா தெரிவித்தார்.

காதலுக்கு மொழி தேவை இல்லை: 15 வருடமாக இருவரும் நண்பர்களாகவே இருந்துவிட்டோம். காதல் என்று வரும்போது கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால், கார்த்திக் ரொம்ப ஸ்வீட்டான பர்சன். என்னை பார்த்ததும் கண்டு பிடித்துவிடுவார் நான் சோகமாக இருக்கிறேனோ, அழுகுறேனோ, சந்தோஷமா இருக்கேனோ என்பதை கண்களாலே பார்த்து தெரிந்துகொள்வார். கொஞ்ச நேரம் அமைதியாக இருப்பார். பிறகு என்னிடம் வந்து பேசி அதை சரி செய்வார். எல்லோருடைய காதலுக்கு மொழி தேவைப்படலாம். எங்க காதலுக்கு மொழியே தேவையில்லை. மனது முழுக்க அன்பும், சிரிப்பும் நிறைந்து இருக்கிறது என அபிநயா மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் நாங்க 2 பேருமே டாம் ஜெர்ரி மாதிரி சண்டை போட்டுக்குவோம். செல்லமா சண்டையும் போட்டுருக்கோம். நிறைய ஜோக்ஸ் சொல்லுவாரு. என்னை எப்படி சமாதானப்படுத்துறதுன்னு அவருக்கு தெரியும். இந்த காதல் தான் திருமணம் வரைக்கும் கொண்டு வந்திருப்பதாக அபிநயா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











