Disha Patani: பசங்க ஹேப்பி மேடம்.. ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சியில் கிளாமர் குத்தாட்டம் போட்ட திஷா பதானி!

கொல்கத்தா: டாடா ஐபிஎல் 18 வது சீசன் இன்று முதல் அதாவது மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. இன்று தொடக்க நாள் என்பதால் கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. இதில் ஸ்ரேயா கோஷல் பாடல் பாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். அதேபோல் நடிகை திஷா பதானி மிகவும் கிளாமரான ஆட்டத்தை போட்டு இப்போது இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறார். அவரது கவர்ச்சி ஆட்டம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

திஷா பதானி தற்போது இந்திய சினிமாவில் மோஸ்ட் வான்டட் நடிகையாக உள்ளார். செம கிளாமரான காட்சிகளில் அட்டகாசமாக நடிக்கிறார் என்பதால், பலரும் அவரை புக் செய்கிறார்கள். இது மட்டும் இல்லாமல், இவர் தனது படங்களில் ஸ்டைலான நடிப்பை வெளிப்படுத்தி பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை தனக்காக உருவாக்கி வைத்துள்ளார். இந்நிலையில் இவர் ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சியில் நடனமாடுகிறார் என்ற தகவல் வெளியானது, ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் குதிக்கத் தொடங்கிவிட்டனர். இவரை நேரில் பார்க்க ஈடன் கார்டனுக்குச் சென்ற ரசிகர்களும் இருக்கிறார்கள்.

IPL 2025 Inogaration Actress Disha Patani Glamour Dance Makes Internet Fire

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. இந்த தொடக்க நிகழ்ச்சியை மொத்தமாக நடிகரும் கடந்த ஆண்டு கோப்பையை வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக் கான் தொகுத்து வழங்கினார். ஸ்ரேயா கோஷல் பாடல் பாட, திஷா பதானி கிளாமரான நடனம் ஆடினார். அதன் பின்னர், பின்னணி பாடகர் கரன் அவுஜலா பாடல்கள் பாடி ஒட்டுமொத்த கூட்டத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

கிளாமர்: இது மட்டும் இல்லாமல், ஷாருக் கான் கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி மற்றும் ரிங்கு சிங் உடன் இணைந்து நடனம் ஆடினார். அதாவது சினிமாவில் கிங் கான் என அழைப்படும் ஷாருக் கான் கிரிக்கெட்டின் கிங் எனப்படும் விராட் கோலியுடன் இணைந்து நடனமாடினார். ஆனால் இது குறித்தான வீடியோக்கள், புகைப்படங்களை விட இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ என்றால், திஷா பதானியின் கிளாமரான ஆட்டம்தான்.

IPL 2025 Inogaration Actress Disha Patani Glamour Dance Makes Internet Fire

திஷா பதானி : அதாவது இணையத்துக்குள் நுழைந்தாலே திஷா பதானியின் கிளாமரான ஆட்டம் குறித்த வீடியோக்கள் தான் வந்து குவிகிறது. மேலும் பலர், திஷா பதானியின் வீடியோவை குறிப்பாக அவரது கிளாமரான நடன அசைவுகள் தொடர்பான வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். இது பரலது கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக ரசிகர்கள் அதாவது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் மைதானத்தில் இருந்த மிகப்பெரிய எல்.இ.டி திரைகளில் திஷா பதானியின் கிளாமர் ஆட்டத்தைப் பகிர்ந்துள்ளார்கள். இவரது கிளாமர் ஆட்டத்தைப் பார்த்து இணையவாசிகள் 'பசங்க ரொம்பவும் ஹேப்பி திஷா பதானி' எனவும், கேமரா மேனுக்கு நன்றி என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

IPL 2025 Inogaration Actress Disha Patani Glamour Dance Makes Internet Fire
IPL 18: இவரது கிளாமரான ஆட்டம் மொத்த இணையத்தையும் ஆட்டம் போட வைத்துள்ளது. பல இணையவாசிகள் ஐபிஎல்க்கு 18 வயது ஆகிவிட்டது என்பதற்கு திஷா பதானியின் ஆட்டம் எடுத்துக்காட்டு என்றெல்லாம் கமெண்ட் அடித்து வருகிறார்கள். மேலும் பலர் திஷா பதானியின் கிளாமரான மாடர்ன் ஆடைகள் குறித்தெல்லாம் கமெண்ட் அடித்து வருகிறார்கள். இப்போது இணையம் முழுவதும் இதுதான் பேச்சாக உள்ளது.

கிரிக்கெட்: இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கும் சினிமா நடிகர்களுக்கும் எந்த அளவிற்கு அபிமானிகளும் ரசிகர்களும் உள்ளார்களோ அதைவிட அதிக அளவிற்கு கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் உள்ளார்கள். இந்தியாவில் அறிவிக்கப்படாத தேசிய விளையாட்டாக கிரிக்கெட் மிளிர்கிறது எனக் கூறும் அளவிற்கு கிரிக்கெட் மீதான ஆர்வம் மக்கள் மத்தியில் காட்டுத்தீ போல உள்ளது. இன்னும் சொல்லப்போனால், கிரிக்கெட் இந்தியாவில் ஒரு மதம் போல உள்ளது என்ற பேச்சு கிரிக்கெட் வட்டாரத்தில் வழக்கமாக கூறப்படும் அளவிற்கு கிரிக்கெட்டிற்கு எப்போதும் ஆதரவு உள்ளது.

ஐபிஎல்: அப்படியான கிரிக்கெட் ரசிகர்களுக்கு தீனி போடும் நிகழ்வாக ஐபிஎல் போட்டிகள் உள்ளது. இந்தியாவில் பல வகையான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டாலும், ரசிகர்களுக்கு ஐபிஎல் மீது தனி ஈர்ப்பு உள்ளது. இதற்கு ஒரு காரணமாக, வெளிநாட்டு வீரர்களைக் கூறலாம். இப்படியான நிலையில், இந்த ஆண்டு 18வது ஐபிஎல் சீசன் இன்று முதல் தொடங்கியது. இந்த சீசனின் தொடக்க விழாவை நடிகரும் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக்கான் தனது ஸ்டைலில் அசத்தலாக தொகுத்து வழங்கினார். இதனை ரசிகர்கள் எதிர்பார்க்காததால் ரசிகர்களுக்கு தீனியாக அமைந்தது.

விராட் - ரிங்கு: அப்போது அவர், மேடைக்கு கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரிங்கு சிங் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான விராட் கோலியை அழைத்து சில கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது ரிங்கு சிங்கிடம் பேசும்போது, ரிங்கு சிங்கிடம் தன்னுடன் நடனம் ஆடும்படி கேட்டுக் கொண்டார். அப்போது அருகில் இருந்த விராட் கோலி இருவரிடம் இருந்து மைக்கை வாங்கி வைத்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தார். மேலும் ரிங்கு சிங் சொன்ன பாடலுக்கு அவருடன் இணைந்து ஷாருக் கான் நடனமாடினார்.

நடனம்: உடனே பாடல் போடப்பட்டது. ரிங்கு சிங் மற்றும் ஷாரூக் கான் இணைந்து நடனமாடினார்கள். அவர்கள் நடனமாடியது பார்ப்பதற்கு சிரிப்பூட்டும் வகையில் இருந்ததால், விராட் கோலி உள்ளிட்ட பலரும் சிரித்தார்கள். இவர்கள் இருவரும் நடனமாடியது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இது மட்டும் இல்லாமல், இந்த வீடியோவை பலரும் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். ஷாருக் கான் விராட் கோலியுடனும் இணைந்து நடனம் ஆடினார். இந்த நிகழ்ச்சியில் விராட் கோலிக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

ஷாருக்கான்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் பலமான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றது. மேலும் இந்த கோப்பையை வெல்வதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக கம்பீர் சொல்லப்பட்டார். கம்பீர் கொல்கத்தா அணியின் கேப்டனாக ஏற்கனவே இரண்டு முறை கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். அதேபோல் கடந்த ஆண்டு கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருந்து அணிக்கு கோப்பையை வாங்கிக் கொடுத்துவிட்டார் என ஷாருக்கான் தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X