எல்லோரும் சொல்லாமல் போனது போல.. என் மூச்சு நிற்கும் வரை.. நடிகை ரேகா நாயரின் உருக்கமான வரி!
சென்னை: சீரியல்களில் நடித்து வந்த நடிகை ரேகா நாயர், பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். தனது முதல் படத்திலேயே யாரும் செய்ய தயங்கும் கதாபாத்திரத்தில் அரைநிர்வாணமாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு படவாய்ப்பு வரவில்லை என்றாலும், இணையத்தில் அவ்வப்போது கவிதைகளை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டுள்ள கவிதை இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
எந்த கருத்தையும் துணிச்சலாக பேசும் நடிகை ரேகா நாயர், இரவின் நிழல் படத்தில் ஒரு பக்க மார்பகத்தை காட்டிக்கொண்டு படுத்து இருந்தார். இதுகுறித்து பேசிய பயில்வான் ரங்கநாதன், பார்த்திபனே ஒரு பக்க மார்பகத்தைத்தான் காட்ட சொன்னார். ஆனால், ரேகா நாயர், இரண்டு பக்க மார்பகத்தை கூட காட்டுகிறேன் சார் என்று கூறியிருக்கிறார். சினிமாவில் எவ்வளவு உடம்பு தெரிகிறதோ, அவ்வளவு காசு என்று பேசி இருந்தார். பயில்வானின் இந்த பேச்சால் கடுப்பான நடிகை ரேகா நாயர், அவர் வாக்கிங் போன இடத்திலேயே மடக்கி பிடித்து விளாசு விளாசு என விளாசினார்.

என் மரணம் வரை: இதைத்தொடர்ந்து பேட்டி அளித்த ரேகா நாயர்,இரவின் நிழல் படத்தில் நான் அப்படி நடித்ததை பெருமையாக பார்க்கிறேன். கலையை கலையாக பார்க்க வேண்டும் என்று போல்டாக பதில் அளித்து இருந்தார். எப்போதும், சோசியல் மீடியாவில் தைரியமாக பல கருத்துக்களை பகிர்ந்து வரும் ரேகா நாயர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு கவிதையை பதிவிட்டுள்ளார்.
அதில், என்மரணம்வரைஎந்தகுறையும்உனக்குஇருக்காது
என்றுசொன்னஅப்பாவுக்குதெரியவில்லை
அதற்குபிறகுஎன்னையார்பார்த்துக்கொள்வார்கள்என்று
தலைவாரி பூச்சூடி அனுப்பி விட்டு கஞ்சியோ கூழோ
நேரத்துக்குசாப்பிடுனுசொன்னவ
இல்லாமல் போனபோது
பல நேரம் சாப்பிட்டேனா என்பதை மறந்து நிற்கிறேன்
உயிர்மூச்சுஇருக்கும்வரைநீதான்என்உயிர்என்றுசொன்னகாதலன்
எந்த மூச்சில் காணாமல் போனான் என்று என்றும் ஞாபகம் இல்லை
என்னைமகாராணியாய்வைத்துக்கொள்ளகட்டியவனோஓடிக்கொண்டேஇருக்கிறான்
அவன் ஓய்வு பெறும்வரை
நல்லாபடிச்சுவேலைக்குபோய்நிறையகாசுசம்பாரிச்சுஉன்னைசந்தோஷமாவச்சுக்கிறேன்னுசொன்னபொண்ணுஎதையோதேடிஎங்கேயோஓடிக்கொண்டிருக்கிறாள்
உற்றார்உறவினர்நண்பர்கள்
எப்போதும் வேறுவேறுநண்பர்களைமாற்றிக்கொண்டேகாணாமல்போகிறார்கள்
எதிரிகளும்துரோகிகளும்என்னைபார்த்துசோர்வடைந்து
தொலைந்துவிட்டார்கள்
நானும்வாழ்க்கையைஓரங்கநாடகமாய்ஆடிக்கொண்டேஇருக்கிறேன்
எனக்கு எது வேண்டும் என்று யாருக்கும் தெரியாது
என்னையாருக்கும்வேண்டாம்என்பதைமட்டும்நான்அறிந்திருக்கிறேன்
எல்லோரும்சொல்லாமல்போனதைப்போல
எனக்கும் சொல்லாமல் நிற்கும் மூச்சுவரை ஓடிக்கொண்டே இருப்பேன். என உருக்கமாக ஒரு கவிதையை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த இணையவாசிகள் என்ன ரேகா என்ன ஆச்சு என்றும், யார் வாழ்க்கையில் தான் பிரச்சனை இல்லை, நீங்கள் தைரியமான பெண் என்று அவருக்கு ஆதரவாக கருத்துக்களை கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











