50 ரூபாய் சோப்பு போடுறவங்க ஃபிரெஷ்ஷா இருக்காங்க.. லட்சக் கணக்குல மேக்கப் போடுற நாங்க.. நடிகை பகீர்!
சென்னை: பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான இரவின் நிழல் படத்தில் ஹீரோயினாக நடித்த சாய் பிரியங்கா ரூத் லேட்டஸ்ட்டாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. நடிகைகள் மேக்கப்புக்காக செலவு செய்வது குறித்து அவர் வெளிப்படையாக அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
கேமரா முன்பாக எப்போதுமே பளிச்சென அழகாக தெரிய நடிகைகள் ஹெவியாக மேக்கப் போட்டுக் கொள்கின்றனர். சினிமாவிலாவது கொஞ்சம் ரியாலிட்டியான முகம் இருக்கும். ஆனால், சீரியல்களில் எப்போதுமே மேக்கப் போட்ட முகத்துடனே பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இரவின் நிழல் ஹீரோயின்: மெட்ரோ, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் மற்றும் இரவின் நிழல் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள இளம் நடிகை சாய் பிரியங்கா ரூத் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வெளிப்படையான கருத்துக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்று வருகிறார். உலகின் முதல் சிங்கிள் ஷாட் படம் என பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், பிரிகிடா சாகா உள்ளிட்ட பல நடிகைகள் நடித்திருப்பார்கள். சாய் பிரியங்கா ரூத்தும் அதில், ஒருவராக நடித்து அசத்தியிருப்பார்.
50 ரூபாய் சோப்பு: 20 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையிலான சோப்பை என் சொந்தக்காரர்கள், வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் பயன்படுத்துகின்றனர். விலையுயர்ந்த சோப்புக் கூட அவர்கள் வாங்குவதில்லை. தங்கள் சருமத்தை பராமரிக்க அவர்கள் செலவு செய்வதே அவ்வளவு தான். ஆனால், அவங்க எல்லாம் ரொம்பவே ஃபிரெஷ்ஷா தெரியுறாங்க என பேசியிருக்கிறார் சாய் பிரியங்கா ரூத்.
ஹெவி மேக்கப் போட்டும்: ஆனால், என்னை எடுத்துட்டுக்கிட்டீங்கனா சன் ஸ்க்ரீன், மாய்ஸ்சரைஸர், டே கேர், நைட் கேர், என்ன வேணா எடுத்துக்கலாம்.. விட்டமின் சி, விட்டமின் கே என பல ஊட்டச்சத்துக்களையும் ஸ்கின்னுக்கு எடுத்துக்குறேன். இது இல்லாம பார்லர் போறவங்க, ஸ்கின் க்ளினிக் போறவங்க ஸ்கின் க்ளினிக் போறாங்க, இவ்ளோ போட்டுக் கூட அவங்க அந்த 50 ரூபாய் சோப்புல குளிச்சிட்டு வந்தா ஃபிரெஷ்ஷா இருக்காங்க.. ஆனால், நம்ம ஃபேஸை பார்க்கும் போது என ஒரு ரியாக்ஷன் கொடுத்திருக்காரு பாருங்க வேற லெவல் வீடியோ என ரசிகர்கள் உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி என கமெண்ட் போட்டு வராங்க..
முகத்தை கெடுத்து விடும்: மேக்கப், ஸ்கின் கேர் புராடெக்ட்ஸ் என நடிகைகள் விலையுயர்ந்த பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல், அதை போடவில்லையென்றால் அவர்களை பார்க்கக் கூட சகிக்காது என்கிற நிலைக்கு அவை இட்டுச் செல்கின்றன. இயற்கை அழகில் சாதாரணமாக முகத்தை கழுவி விட்டு வருபவர்களின் சருமமும் முகமும் அப்படியே கெட்டுப் போகாமல் இருக்கும் என அழகு கலை நிபுணர்கள் பலரும் அளவான மேக்கப் தான் பயன்படுத்த வேண்டும் என்றும் இயற்கையான முறையில் அழகை பராமரிப்பது தான் சிறந்தது என்று கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











