ஸ்ரீ எவ்வளவு நல்லவர் தெரியுமா?.. அவர் என்ன பண்றாருனு யாருக்கும் தெரியாது.. பிரபல நடிகை ஓபன் டாக்

சென்னை: கோலிவுட்டில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார் ஸ்ரீ. இதுவரை ஐந்து படங்கள் மட்டுமே அவர் நடித்திருந்தாலும் அவற்றில் நான்கு படங்கள் சூப்பர் ஹிட்டடித்தவை. ஆனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. சூழல் இப்படி இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்னதாக அவரது புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அவர் குறித்து இறுகப்பற்று படத்தில் நடித்த நடிகை சானியா ஐயப்பன் தெரிவித்திருக்கிறார்.

பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு எண் 18/9 படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ஸ்ரீ. இந்தப் படத்துக்கு முன்னதாக அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் அறிமுகமான முதல் படமே சூப்பர் ஹிட்டானது. லோ பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்த அந்தப் படத்தில் ஸ்ரீயின் நடிப்பு பலரது கவனத்தையும் ஈர்த்தது. கண்டிப்பாக மினிமம் கியாரண்டி இயக்குநராக அவர் வலம் வருவார் என்றே எதிர்பார்த்தார்கள்.

மாநகரம் டூ இறுகப்பற்று: அதன்படி மாநகரம், வில் அம்பு, இறுகப்பற்று உள்ளிட்ட படங்களில் நடித்தார். அவற்றில் மாநகரம், இறுகப்பற்று படங்கள் சூப்பர் ஹிட்டடித்தன. அவருக்கு மிகச்சிறந்த பெயர் கிடைத்தது. மேலும் லோகேஷ் கனகராஜுக்கு நெருக்கமானவராகவும் அறியப்பட்டார். லோகேஷும் இயக்குநராக உச்சத்துக்கு சென்றதால் கண்டிப்பாக ஸ்ரீயும் அவர் போலவே உச்சம் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்குரிய அத்தனை தகுதிகளும் அவருக்கு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Irugapattru Movie Actress Sania Iyyappan Talks about Maanagaram Shri

ஸ்ரீயின் பரிதாப நிலைமை: ஆனால் அவர் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஸ்ரீயும் எவ்வளவோ முயன்று பார்த்தார் என்றே தெரிகிறது. ஒருகட்டத்தில் ஒட்டுமொத்தமாக சினிமாவிலிருந்து காணாமல் போனார் அவர். சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு அவரது வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகின. அவற்றில் ஸ்ரீ ஆளே உருக்குலைந்து போய் பார்ப்பதற்கு பரிதாபமாக இருந்தார். அதுமட்டுமின்றி போதைக்கும் அவர் அடிமையாகிவிட்டாரோ என்ற சந்தேகமும் பலமாக எழுந்தது.

என்ன நடந்தது?: அந்த வீடியோக்கள், புகைப்படங்களுக்கு பிறகு ஸ்ரீயின் நிலைமை குறித்து பலரும் கவலையடைந்தனர். அவரது உறவினர்களோ, ஸ்ரீக்கு மன அழுத்தம். பணம் தராமல் ஏமாற்றிவிட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அதேபோல் ஸ்ரீயும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வில் அம்பு போன்ற படங்களில் நடித்ததற்கு தனக்கு சம்பளம் வரவில்லை. நீண்ட காலமாக வராத சம்பளம் இப்போதும் வரும் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் அதனை மறுத்திருக்கிறார்கள்.

நடிகையின் பேட்டி: இந்நிலையில் ஸ்ரீ குறித்து இறுகப்பற்று படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சானியா ஐயப்பன் கூறுகையில், "ஸ்ரீயுடன் நான் நடித்தபோது படத்தின் ஷூட்டிங் முடிந்தாலே அவர் எங்கே இருக்கிறார் என்ன செய்கிறார் என்றெல்லாம் தெரியாது. இறுகப்பற்று படம் வெளியானபோதுகூட படத்தில் யார் யாருடன் ஜோடியாக நடித்தார்களோ அவர்கள் ஜோடியாகவே வந்திருந்தார்கள். ஆனால் எனக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீ வரவில்லை.அதனால் நான் சிங்களாக இருந்தேன். நான் பல மெசேஜ்களை செய்தும் அதற்கு அவர் ரிப்ளை செய்யவே இல்லை" என்று தெரிவித்திருக்கிறார். அவரது இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X