ப்பா.. நெஞ்சுல அவ்ளோ பெரிய டாட்டூ.. இறுகப்பற்று நடிகையின் தாராள மனசு.. த்ரிஷாவையே மிஞ்சிட்டாங்க!
சென்னை: Irugapattru Saniya Iyappan - நடிகைகள் தங்கள் உடம்பில் பல முக்கிய பகுதிகளிலும் சில மர்ம பகுதிகளிலும் டாட்டூக்களை போட்டுக் கொள்வதை ஆர்வமாக கொண்டுள்ளனர். நடிகை த்ரிஷா குருவி படத்தின் சமயத்தில் நெஞ்சில் குத்திய நிமோ மீன் டாட்டூ அப்போது பலரது கவனத்தை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், தற்போது இறுகப்பற்று படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ள இளம் நடிகை சானியா ஐயப்பன் தனது நெஞ்சில் ஒரு பூ டாட்டூவை போட்டுள்ளார்.

லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்ட போட்டோக்களில் அந்த பூ டாட்டூ பலரது கண்களையும் கவனத்தையும் அதிகளவில் கவர்ந்துள்ளது.
இறுகப்பற்று நடிகை: இயக்குநர் யுவராஜ் இயக்கத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், விக்ரம் பிரபு, சானியா ஐயப்பன், ஸ்ரீ, அபர்ணதி மற்றும் வித்தார்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான இறுகப்பற்று திரைப்படம் காதலர்கள் மத்தியிலும் கல்யாணம் ஆனவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தியேட்டரில் பெரிதாக வசூல் ஈட்டவில்லை என்றாலும், போதிய வசூலை ஈட்டிய அந்த படம் ஓடிடியில் வெளியாகியும் ரசிகர்களை கவர்ந்தது. அந்த படத்தில் மலையாள நடிகை சானியா ஐயப்பன் மாநகரம் ஹீரோ ஸ்ரீக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தத்தி தான்: பொதுவாகவே ஆண்கள் பெண்களை தத்தி என்கிற மனநிலையில் தான் ட்ரீட் செய்வார்கள் என்றும் பெண்கள் ஆண்களை விட செம ஸ்மார்ட் என்பதையும் அழகாக அந்த போர்ஷனில் இயக்குநர் உணர்த்தியிருப்பார். கூகுள் மேப் கூட பார்க்கத் தெரியல என ஸ்ரீ திட்டும் போதும் ஆமா நான் தத்தி தான்.. தத்தி தான் என சானியா ஐயப்பன் நடித்து ஸ்கோர் செய்திருப்பார்.
நெஞ்சில் பெரிய டாட்டூ: மலையாள நடிகையான சானியா ஐயப்பன் இறுகப்பற்று படத்தில் மட்டும் தான் ஹோம்லியாக நடித்திருப்பார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் சென்று பார்த்தால் ஒட்டுமொத்தமாகவே நீச்சல் உடை தரிசனம் தான் அதிகம் கிடைக்கும். இந்நிலையில், அவர் நெஞ்சில் பச்சைக் குத்தியுள்ள பூ டிசைன் போட்ட டாட்டூ தெரியும் படி லேட்டஸ்ட்டாக சில போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வசீகரித்துள்ளார்.
த்ரிஷா டாட்டூ: நடிகைகள் நயன்தாரா, சமந்தா, த்ரிஷா என பலரும் டாட்டூ பிரியைகள் தான். நடிகை த்ரிஷா தனது நெஞ்சில் அனிமேஷன் மீன் படமான நிமோ டாட்டூவை போட்டிருக்கிறார். அதையே ஓவர்டேக் செய்து விட்டது உங்களுடைய டாட்டூ என ரசிகர்கள் சானியா ஐயப்பன் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுக்கு கீழ் கமெண்ட் போட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











