»   »  வெட்கப்பட கஷ்டப்பட்ட ரித்திகாசிங்...

வெட்கப்பட கஷ்டப்பட்ட ரித்திகாசிங்...

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இறுதிச்சுற்று படத்தில் நடித்த குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங், படத்தில் நடிக்கும் போது வெட்கப்பட்டு நடிக்க வேண்டிய காட்சிகளில் மிகவும் கஷ்டப்பட்டாராம். மாதவனின் தீவிர ரசிகை என்பதால் படத்தில் நடிக்க சம்மதித்ததாக கூறும் ரித்திகா, தன்னிடம் இருந்து மாதவன் பாக்சிங் கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Iruthisutru Ritika Singh Interview

மீன் வாங்கலயோ மீனு என்று கூவி கூவி மீன் விற்றவர் ரித்திகா சிங். ஏய் கிழம்... உம் மூஞ்சிக்கு ஏத்த ஜோடியா போய் பாரு மாதவனை கலாய்க்கும் காட்சியில் பயத்தை வெளிக்காட்டாமல் நடித்தாராம். அந்த முதல் சீனிலேயே ரித்திகாவை அனைவருக்கும் பிடித்துப்போனது


குத்துச்சண்டை பற்றிய கதை என்பதால் நிஜ வீராங்கனை நடிக்க வைத்துள்ளார் இயக்குநர் சுதா. எப்படி ஒரு வீராங்கணை திடீரென நடிகை அவதாரம் எடுத்தார் என்பதை ரித்திகாவே கூறியுள்ளார்.


Iruthisutru Ritika Singh Interview

படப்பிடிப்புக்கு போவதற்கு முன்னாடி ரெண்டு நாட்கள் ட்ரெய்னிங் கொடுத்தாங்க. மார்ஷியல் ஆர்ட், கராத்தே எல்லாம் பழகியிருந்ததால், உடம்பு விறைப்பா இருக்கும். `அந்த பாடிலாங்வேஜ் வேண்டாம். கொஞ்சம் ஜாலியா இருக்கணும்'னு உடம்பை லூஸாக்கச் சொன்னாங்க. கொஞ்சம் சிரமப்பட்டாலும் உடனே அவங்க சொன்னதைப் பிடிச்சுட்டேன் என்று கூறியுள்ளார் ரித்திகா சிங்.


ஷூட்டிங்ல அவங்க சொன்னதுபோல செஞ்சேன். நான் பாக்ஸர்ங்கிறதால ஈஸியாத்தான் இருந்தது. வெட்கப்படத்தான் ரொம்பக் கஷ்டப்பட்டேன். சுதா மேடம் என்மேல வெச்ச நம்பிக்கையைக் காப்பாத்திட்டேன்னுதான் நினைக்கிறேன் என்று கூறியுள்ளார் ரித்திகா.


நல்லாவே காப்பாத்திட்டம்மா மதி... என்கின்றனர் தமிழக ரசிகர்கள்.

English summary
Ritika Singh is not one to pull her punches. The 22-year-old boxer, who steps into kollywood as R Madhavan's co-star in Iruthisutru, does not bat an eyelid when talking about the scams and scandals plaguing the Indian boxing scene. "The state of affairs right now is saddening," she sighs.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil