Samantha: சமந்தாவிற்கு என்ன குறை.. எதுக்கு இரண்டாம் தாரமாகனும்.. கொந்தாளித்த ஃபேன்ஸ்!

சென்னை: நடிகர் நாக சைதன்யா டிசம்பர் மாதம் சோபிதா துலிபாலாவை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட நிலையில், தற்போது சமந்தாவும் இரண்டாவது திருமணத்துக்கு ரெடியாகி விட்டதாக இணையத்தில் செய்திகள் வலம் வருகின்றன. நடிகை சமந்தா, இயக்குநர் ராஜ் நிடிமோருவை காதலித்து வருவதாகவும் இருவருக்கும் மே மாதம் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகை சமந்தா எந்த அளவிற்கு பிரபலமாக இருக்கிறாரோ அதே அளவிற்கு சர்ச்சைக்கும் குறைவில்லாதவர். இவர் சினிமாவில் அறிமுகமான புதிதில் நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்ததாக கிசுகிசு பரவியது. இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என செய்தி பரவிய நேரத்தில், அவர்களின் காதல் முறிந்துவிட்டது. இதைத்தொடர்ந்து, நடிப்பில் கவனம் செலுத்திய சமந்தா, தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படத்தில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

Samantha Raj Nidimoru dating

நாக சைத்தன்யா,சமந்தா: இதைத் தொடர்ந்து, நடிகர் நாக சைதன்யாவை காதலித்த நிலையில் 2017 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடந்தது. திருமணத்திற்கு பின் சமந்தா தொடர்ந்து நடித்து வந்தார். நாக சைத்தன்யா, சமந்தாவின் வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நேரத்தில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நாக சைத்தன்யாவின் குடும்ப பெயரை நீக்கினார். மேலும் நாக சைத்தன்யாவுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களையும் டெலிட் செய்தார். இதன்பின் இருவரும் ஒரே நேரத்தில், பிரிவதாக அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர்.

Samantha Raj Nidimoru dating

இயக்குநருடன் காதல்: அதைத் தொடர்ந்து சினிமா மீது கவனத்தை செலுத்திய சமந்தா, விவாகரத்திற்கு பின் கூடுதலாக கவர்ச்சி காட்டி நடித்தார். ஆனால், விவாகரத்திற்கு பின் சமந்தா நடித்த யசோதா, சாகுந்தலம், குஷி என எந்த படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதே நேரம் அறியவகை நோயால் பாதிக்கப்பட்டதால், தற்போது சமந்தா சினிமாவில் இருந்து சற்று ஒதுக்கி இருக்கிறார். அவர் என்னத்தான் சினிமாவில் இருந்து ஒதுங்கி ஓய்வு எடுத்து வந்தாலும், அவர் குறித்த சர்ச்சை தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. அண்மையில் சமந்தா, த பேமிலி மேன், சிட்டாடல் ஆகிய வெப் தொடர்களை இயக்கிய ராஜ் நிடிமோருடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். அதுமட்டுமில்லாமல், காளஹஸ்தி கோயிலுக்குச் சென்று ராகு, கேது பூஜையையும் சமந்தா செய்து இருந்தார். இதனால், இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் ராஜ் நிடிமோரை சமந்தா திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் இணையத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

Samantha Raj Nidimoru dating

இயக்குநரான ராஜ் நிடிமோரு, தி பேமிலி மேன் 2 என்கிற வெப் தொடரை டிகே என்பவருடன் சேர்ந்து இயக்கி இருந்தார். மேலும், இவர் சிட்டாடெல் என்கிற வெப் தொடரை இயக்கி இருந்தார். தி பேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தா நடித்த போதே இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டதாகவும், சிட்டாடெல் படப்பிடிப்பின் போது அந்த நட்பு காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இயக்குனர் ராஜ் நிடிமோருக்கு ஏற்கனவே திருமணமாகி, ஷியாமலி என்கிற மனைவி உள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்ட ரசிகர்கள் இரண்டாவது மனைவியாகிறாரா நடிகை சமந்தா என கேள்வி கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X