வாத்தி படத்திலிருந்து வெளியேறிவிட்டாரா சம்யுக்தா மேனன்!

சென்னை : இதுவரை தமிழ் மற்றும் ஹிந்தியில் கலக்கிக் கொண்டிருந்த நடிகர் தனுஷ் முதல்முறையாக தெலுங்கில் அறிமுகமாகிறார்

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நேரடியாக தெலுங்கில் நடிக்கும் படத்திற்கு வாத்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிய நிலையில் இப்படத்தின் கதாநாயகி சம்யுக்தா மேனன் திடீரென வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழ் திரையுலகின் அசுரனாக

தமிழ் திரையுலகின் அசுரனாக

தனது ஒவ்வொரு படத்திற்கும் நடிப்பை அசுரத்தனமாக காட்டி தமிழ் திரையுலகின் அசுரனாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் மாஸ் காட்டி வருகிறது. மேலும் தனுஷ் நடித்த தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மற்ற மொழி திரைப்படங்களும் ரசிகர்களிடையே பெரும் ஆதரவைப் பெற்று வருகிறது தமிழைத் தொடர்ந்து ஹிந்தியிலும் தனுஷ் படங்களில் நடித்து பாலிவுட்டில் மிகப் பிரபலமான நடிகராக உள்ளார்

இரண்டு நடிகைகள்

இரண்டு நடிகைகள்

தொடர்ந்து வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் தனுஷுக்கு தமிழில் மாறன் மற்றும் திருச்சிற்றம்பலம் ஆகிய படங்கள் வெளியாக உள்ளது இதில் மாறன் படத்தை இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். மாளவிகா மோகனன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அனைத்து பணிகளும் முடிந்து இப்படம் மிக விரைவிலேயே ரிலீசாக உள்ளது. அதை தொடர்ந்து யாரடி நீ மோகினி பட இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படத்திற்கு திருச்சிற்றம்பலம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தில் ராஷி கன்னா மற்றும் நித்யா மேனன் என இரண்டு நடிகைகள் நடிக்கின்றனர்

வாத்தி

வாத்தி

இந்த நிலையில் தனுஷ் நேரடியாக தெலுங்கு திரைப்படத்தில் நடித்து தெலுங்கில் அறிமுகமாகிறார். தனுஷின் பாடங்கள் பல தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி இருந்தாலும் முதல் முறையாக தனுஷ் நடிப்பில் தெலுங்கில் உருவாகும் முதல் படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது மேலும் இந்த படத்தை இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்க சிதாரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக

படத்திலிருந்து வெளியேறிவிட்டதாக

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது மேலும் இதில் தனுஷ் பள்ளி மாணவராக பள்ளி சீருடையில் இருக்கும் புகைப்படமும் வெளியாகி வைரல் ஆனது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகும் இந்த படத்திற்கு வாத்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது நடிகை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கியிருக்கும் சூழலில் இப்படத்தின் கதாநாயகி சம்யுக்தா மேனன் படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை மிக விரைவிலேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X