வாய்ப்பே இல்லை: பாலிவுட்டை விட்டு வெளியேறும் அசின்?

By Siva

மும்பை: கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்ற அசினுக்கு தற்போது அங்கு வாய்ப்பே இல்லையாம். அதனால் அவர் அங்கிருந்து கிளம்பிவிடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நாயகியாக இருந்து வந்தவர் அசின். திடீர் என்று அவருக்கு பாலிவுட்டுக்கு சென்று அங்கு பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. இதையடுத்து தமிழ், தெலுங்கு படங்களுக்கு குட்பை சொல்லிவிட்டு மும்பையில் செட்டிலானார்.

அவர் மும்பையில் செட்டிலான பிறகு அவரைப் பற்றி பல செய்திகள் உலா வந்தன. இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷுடன் காதல், தென்னிந்திய நடிகைகளைப் பார்த்தாலும் பார்க்காத மாதிரி செல்கிறார், இந்தி நடிகைகளுக்கு அவரைப் பிடிக்கவில்லை என்று பல செய்திகள் பரவின. இந்நிலையில் அசின் பாலிவுட்டை விட்டு வந்துவிடலாமா என்ற யோசனையில் உள்ளார் என்று கூறப்படுகிறது.

கஜினி மூலம் பாலிவுட் போன அசின்

கஜினி மூலம் பாலிவுட் போன அசின்

கஜினி இந்தி ரீமேக் மூலம் பாலிவுட் போன அசின் அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

வெற்றிப் படங்களில் நடித்தும் பலனில்லை

வெற்றிப் படங்களில் நடித்தும் பலனில்லை

அவர் இந்தியில் பல வெற்றிப் படங்களில் நடித்தும் அவருக்கு அங்கு மவுசு இல்லையாம். விளைவு தற்போது கையில் சுத்தமாக படமில்லை.

பாலிவுட்டில் இருந்து போய்விடலாமா?

பாலிவுட்டில் இருந்து போய்விடலாமா?

அக்ஷய் குமாருடன் நடித்த கிலாடி 786 படத்திற்கு பிறகு அவருக்கு இந்தியில் வாய்ப்பே இல்லை. தமிழில் முருகதாஸ் படம் ஒன்றில் மட்டுமே புக்காகியுள்ளார். இந்நிலையில் பாலிவுட்டை விட்டு அவர் வெளியேறக்கூடும் என்று பேச்சாக கிடக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X