எனக்குள் கடவுள் இருக்கிறார்.. காலடியில் கண்ணீர் விட்டு அழுதேன்.. துறவியாகிறாரா பிக் பாஸ் அபிராபி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே கவனம் பெற்றவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். "Ctrl Alt Del" வலைத்தொடரில் நடித்து நடிகையாக மாறிய இவர் பின் சன் தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தற்போது இவர் கடவுள் பற்றி பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதைப்பார்த்த இணையவாசிகள் துறவியாகிவிட்டாரா என கேட்டு வருகின்றனர்.

நடிகை அபிராமி, விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான 'NOTA' எனும் படத்தின் மூலம் திரைப்படங்களில் நடித்தார். பின் ஓடிடியில் ரிலீஸான களவு படத்தில் நடித்திருந்தார். அதே ஆண்டு அஜித் நடித்த "நேர்கொண்ட பார்வை" படத்திலும் நடித்து அவரது நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து ராக்கெட்டரி தி நம்பி எஃபெக்ட், வான் மூன்று, துருவ நட்சத்திரம், வல்லான் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Abhirami Venkatachalam instagram

நடிகை அபிராமி: பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்ட இவர், அதில் கவினை எனக்கு ரொம்பபிடிக்கும் என வீட்டிற்கு சென்ற நாளில் இருந்தே சொல்லிக்கொண்டு வந்தார். ஆனால் வீட்டில் விளையாட்டை சரியாக விளையாடாததால், சில நாட்களிலேயே வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். அதன் பின் அபிராமிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பான "நினைத்தேன் வந்தாய்" எனும் சீரியலில் நடித்து வந்தார். ஆனால், அந்த சீரியலில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

Abhirami Venkatachalam instagram

துறவியாகிறாரா: இந்த நிலையில் ஈஷா யோகா மையத்தில் வெள்ளை உடையில் கண்ணீருடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில், இந்த ஆண்டில் இருந்து இந்த பயணத்தை நான் தொடங்கி இருக்கிறேன். ஆனால், எனக்குள் இதை நாம் எப்படி செய்ய போகிறோம் என்கிற பயம் இருந்தது. ஆனால், சத்துரு மிகவும் உயர்வானவர் அவரால் எல்லாம் நடந்தது. வெள்ளை துணியை என் மேலே போட்டதும், சிவனுக்கு ஏதோ சேவை செய்யப்போகிறோம் என்கிற எண்ணம் வந்துவிட்டது. எனக்கும் இருக்கும் தேவையில்லாத பாரம் ஒவ்வொன்றாக என்னைவிட்டுப்போவதை நான் உணர்ந்தேன். இப்போது என் மனசு எப்படி இருக்கிறது என்றால், தியானலிங்கம் எனக்குளையே இருப்பது போல் உணர்கிறேன். யார் என்னை பார்த்தாலும் அவர் என்னை பார்ப்பது போல உணர்கிறேன் என்று கண்களில் கண்ணீர் வழியே பேசி உள்ளார். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலர் அபிராபி துறவியாகிறாரா? என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X