»   »  நெருங்கத் துடிக்கும் காதலன் ரன்வீர் சிங்கை தவிக்க விடும் தீபிகா படுகோனே

நெருங்கத் துடிக்கும் காதலன் ரன்வீர் சிங்கை தவிக்க விடும் தீபிகா படுகோனே

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் தனது காதலி தீபிகா படுகோனே மீது கோபத்தில் உள்ளாராம்.

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரை பிரிந்த பிறகு தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து வருகிறார். சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் ராம் லீலா படத்தில் நடிக்கையில் அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.

ரன்வீர் சிங் தான் தீபிகா என் காதலி என்று கூறி வருகிறார். ஆனால் தீபிகா காதல் பற்றி பேசுவதே இல்லை.

பாஜிராவ் மஸ்தானி

பாஜிராவ் மஸ்தானி

ரன்வீரும், தீபிகாவும் மீண்டும் சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் பாஜிராவ் மஸ்தானி படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரியங்கா சோப்ராவும் உள்ளார்.

தீபிகா

தீபிகா

பாஜிராவ் மஸ்தானி படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்தது. இதையடுத்து தனது குடும்பத்துடன் நேரம் செலவிட தீபிகா கிளம்பினார்.

ரன்வீர்

ரன்வீர்

தீபாகவுடன் தானும் வருவதாக ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார். அதற்கு தீபிகா நீங்கள் ஒன்றும் வர வேண்டாம் என்று வெடுக்கென்று கூறிவிட்டாராம்.

குடும்பம்

குடும்பம்

தீபிகாவின் குடும்பத்தாருடன் நெருங்கிப் பழக விரும்புகிறார் ரன்வீர். ஆனால் தீபிகாவோ ரன்வீரை அவரது குடும்பத்தாருடன் நெருங்கவிடாமல் தடுக்கிறார். இதனால் ரன்வீருக்கு தீபிகா மீது கோபமாம்.

காதல்

காதல்

ரன்வீர் தான் தீபிகாவை காதலிக்கிறார். தீபிகா அவரை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று பாலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.

English summary
Actor Ranveer Singh is reportedly angry with his girlfriend Deepika Padukone as she is not allowing him to come close to her family.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil