யாமினாங்க, இலியானானாங்க... இப்ப இவராம்... அஜித்தின் 'வலிமை'யில் ரஜினி ஹீரோயின்?
சென்னை: அஜித்தின் 'வலிமை'யில் இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிப்பதாகக் கூறப்படுகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம், நேர்கொண்ட பார்வை. இந்தியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான பிங்க் படத்தின் ரீமேக் இது.
இந்தியில், அமிதாப்பச்சன் நடித்திருந்த வேடத்தில் அஜித் நடித்திருந்தார். இந்தப் படம் ஹிட்டானது. இதைத் தொடர்ந்து வலிமை படத்தில் நடிக்கிறார் அஜித்.

யுவன் சங்கர் ராஜா
'நேர்கொண்ட பார்வை'யை இயக்கிய வினோத் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

சென்னையில் செட்
இதில் அஜித், காவல்துறை அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடந்து வந்தது. இப்போது படக்குழு சென்னை திரும்பியுள்ளது.
சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. இங்கு அடுத்த ஷெட்யூல் விரைவில் தொடங்க உள்ளது.

அப்டேட்
பொங்கலை முன்னிட்டு படத்தின் அப்டேட் ஏதாவது வரும் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். எந்த அறிவிப்பும் வராததால் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் அஜித், காஞ்சிபுரம் போலீசாருடன் நிற்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

யாமி, இலியானா
இதில் அஜித் ஜோடியாக, யாமி கவுதம் நடிக்கிறார் என்றும் இலியானா நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாயின. இதுபற்றி படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் இந்தி நடிகை ஹூமா குரேஸி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் ரஜினிகாந்தின் காலா படத்தில் நடித்திருந்தார்.

ஹூமா குரேஸி
சென்னையில் வலிமை படக்குழுவை ஹூமா சந்தித்து பேசியதாகவும் கேரக்டர் பற்றி தெரிந்துகொண்ட அவர், நடிக்க ஓகே சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. இவர் ஏற்கனவே அஜித்தின் பில்லா 2 படத்தில் நடிக்க வேண்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











