'பப்பாளியோ, ஹனி'யோ ஒரு நாள் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆகணும்!
'வேட்டை மன்னன்', 'வாலு' ஆகிய இரு படங்களில் சிம்புவும், ஹன்சிகாவும் ஜோடியாக நடித்து வருகின்றனர். படப்பிடிப்பில் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில், ஹைதராபாத்தில் தெலுங்கு படப்பிடிப்பில் இருந்த ஹன்சிகாவை பார்ப்பதற்காக சிம்பு வந்ததாகவும், இருவரும் அங்குள்ள ஓட்டலில் சந்தித்து பேசியதாகவும் ஆந்திர பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
7 படங்களை கைவசம் கொண்ட பிசியான நடிகையாக ஹன்சிகா தற்போது உள்ளார்.

சேட்டை-பிரியாணி - தீயா வேலை செய்யனும் குமாரு
தமிழில் சிம்பு உடன் நடிக்கும் படங்கள் தவிர ஆர்யாவுடன் சேட்டை, சூர்யா ஜோடியாக 'சிங்கம்-2', கார்த்தியுடன் பிரியாணி, சுந்தர்.சி. இயக்கும் 'தீயா வேலை செய்யனும் குமாரு' போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.

தட்டிப் பறிப்பாரா குட்டி குஷ்பு...
தமிழில் மட்டுமல்ல, சிம்புவின் மனதிலும் நயன்தாரா இடத்தை ஹன்சிகா தட்டி பறிப்பார் என்கின்றனர். மேலும், 'குட்டி குஷ்பு' என்றும் வர்ணிக்கப்படுகிறார்.

அவங்களுக்கு பப்பாளி.. சிம்புவுக்கு ஹனி
சிம்புவும், ஹன்சிகாவை புகழ்ந்து பேசி வருகிறார். அனைவராலும் ‘பப்பாளி' என அழைக்கப்படும் ஹன்சிகாவை, சிம்பு மட்டும் செல்லமாக 'ஹனி' என்று அழைக்கிறார். ரகசியமாக உள்ள சிம்பு, ஹன்சிகா காதல் விஷயம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேச்சே அது வதந்திப்பா...
ஹைதராபாத்தில் ஹன்சிகாவிடம் சிம்புவை காதலிக்கிறீர்களா? என்று நிருபர்கள் கேட்டபோது, சிம்புவுக்கும், எனக்கும் காதல் என்பது வதந்தி. நட்பாகதான் பழகுகிறோம் என்று வழக்கமாக நடிகைகள் சொல்லும் அதே பதிலையே சொன்னார்.
‘பப்பாளியோ, ஹனியோ ஒரு நாள் கடைத்தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்'


Click it and Unblock the Notifications











