கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பது தப்பா? கேட்பது பூஜா

By Mayura Akilan

நான் கடவுள்' படத்தில் கண் பார்வை இல்லாத பெண்ணாக நடித்து அழுத்தமான முத்திரை பதித்தவர் பூஜா. பூஜாவுக்கு, தமிழில் படங்களும் இல்லாததால் தாய்வீடான ஸ்ரீலங்காவிற்கு சென்று விட்டார்.

தற்போது, அவருக்கு அதிகமாக படங்கள் இல்லை என்றாலும், அவ்வப்போது திரைப்படங்களின் பாடல் வெளியீட்டு விழா, விருதுவிழாக்களுக்கு வந்து செல்கிறார். இதனால் மீண்டும் காதல் பரபரப்பு செய்திகளில் சிக்கி வருகிறார்.

நான் சுதந்திரமான பொண்ணு. என் மனசுக்கு பட்டதை துணிச்சலுடன் செய்யிற பொண்ணு என்று ஏற்கனவே படபடத்தவர் பூஜா. படவிழாக்களில் ஹீரோ, பட தயாரிப்பாளர், விருது பெறுபவர் என அனைவருக்கும் முத்தம் கொடுக்கத் தயங்காதவர் பூஜா.

ஆர்யாவுக்கு முத்தம்

ஆர்யாவுக்கு முத்தம்

சமீபத்தில் ஆர்யா தயாரித்து வெளியிடும் அமரகாவியம் படத்தின் ஆடியோ விழாவுக்காக சென்னை வந்த பூஜா, அந்த விழா மேடையில் ஏறியதும், ஆர்யாவை ஓடிச்சென்று கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்து சலசலப்பை ஏற்படுத்தினார்.

தொடர்ந்த நட்பு

தொடர்ந்த நட்பு

நான்கடவுள் படத்தில் ஆர்யவுடன் ஏற்பட்ட நட்பு மீண்டும் தொடரவே பல நாட்கள் சென்னையிலேயே டேரா போட்ட விட்டுதான் இலங்கை சென்றாராம். பிலிம்பேர் விழாவிற்கு வந்தும் ஆர்யா உடனே சுற்றியுள்ளார். இதனால் மீண்டும் கிசுகிசு கிளம்பியது.

விஜய் விருது விழாவில்

விஜய் விருது விழாவில்

சமீபத்தில் விஜய் விருது வழங்கும் விழா நடைபெற்றது. 'சூது கவ்வும்' படத்துக்குச் சிறந்த பின்னணி இசை விருது பெற்றார் சந்தோஷ் நாராயணன். அவருக்கு விருதை வழங்க வந்த பூஜா, நான் இப்போ சந்தோஷ்க்கு விருது கொடுத்துட்டேன். அப்போ இவர் எனக்கு முத்தம் கொடுக்கணும்ல!'' என்று கேட்க கூச்சத்தில் நெளிந்தார் சந்தோஷ். ஆனாலும், விடவில்லை பூஜா. ''சரி அப்போ நான் கொடுக்கிறேன்'' என அவரை நெருங்க, அதிர்ச்சியடைந்த சந்தோஷ் அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.

கடவுள் பாதி மிருகம் பாதி

கடவுள் பாதி மிருகம் பாதி

இதேபோல கடவுள் பாதி மிருகம் பாதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்த பூஜா, ஒரு படத்தை இயக்கி தயாரித்துள்ள ராஜூவை விழா மேடையிலே வாடா போடா என்று அழைத்து ஒரு வழி செய்துவிட்டார்.

அன்பாக பழகுவேன்

அன்பாக பழகுவேன்

தன்னுடைய இந்த செயலுக்கு விளக்கம் அளித்துள்ள பூஜா, நான், 'அனைவரிடமும் அன்பாக பழகுவேன். என்னை அவர்களுக்கு பிடித்து விட்டால், அதிக உரிமை எடுத்துக் கொண்டு பழகுவேன் என்று கூறியுள்ளார்.

முத்தம் கொடுப்பது தப்பா

முத்தம் கொடுப்பது தப்பா

முத்தம் கொடுப்பேன்; கட்டிப்பிடிப்பேன். இது என்னுடைய அன்பின் வெளிப்பாடு தான். இதை பார்ப்பவர்கள் உடனே அவர்களுடன் என்னை இணைத்து காதல் செய்தி பரப்புகின்றனர்' இது தப்பா என்று கேட்கிறார் பூஜா?

தப்பை தப்பில்லாம பண்ணினா தப்பேயில்லை பூஜா!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X