திருமணமான மம்மூட்டி மகனை காதலிக்கும் நஸ்ரியா?
சென்னை: நடிகை நஸ்ரியா நஸீம் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மானை காதலிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் கோலிவுட்டுக்கு வருகிறார். அவர் அறிமுகமாகும் படம் வாயை மூடி பேசவும். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நஸ்ரியா நஸீம்.
மேலும் இந்த படத்தில் ரோஜா பட புகழ் மதுபாலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

கெமிஸ்ட்ரி
படத்தில் துல்கருக்கும், நஸ்ரியாவுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி சூப்பராக உள்ளதாம். இந்நிலையில் கெமிஸ்ட்ரி நிஜ வாழ்க்கையிலும் ஒர்க் அவுட் ஆகிவிட்டதாம்.

காதல்
நஸ்ரியாவும், துல்கரும் காதலர்களாக வலம் வருவதாக செய்திகள் வந்துள்ளன. இதில் விந்தை என்னவென்றால் துல்கர் ஏற்கனவே திருமணம் ஆனவர்.

பப்ளிசிட்டி
நய்யாண்டி ரிலீஸ் நேரத்தில் தொப்புள் விவகாரம் மூலம் படத்திற்கு விளம்பரம் கிடைத்தது. இந்நிலையில் வாயை மூடி பேசவும் ரிலீஸின்போது இந்த காதல் மேட்டரை பெரிய அளவில் பரப்ப படக்குழுவே முடிவு செய்திருக்கிறதாம்.

காயம்
மூணாறில் படப்பிடிப்பு நடந்த போது மழையில் ஸ்கூட்டி ஓட்டி வரும் காட்சியில் நடித்த நஸ்ரியா கீழே விழுந்து காயம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











