என்னாது ஓவியா லெஸ்பியனா?: சோ வாட்?
Recommended Video

சென்னை: 90 எம்.எல். படத்தில் ஓவியா ஓரினச்சேர்க்கையாளராக நடிக்கிறார் என்று ஒரு தகவல் தீயாக பரவியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியை அடுத்து ஓவியா கோலிவுட்டின் பிசியான நடிகையாகிவிட்டார். ராகவா லாரன்ஸின் காஞ்சனா 3, களவாணி 2 ஆகிய படங்களில் நடிக்கிறார்.
இந்நிலையில் அவர் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சிம்பு
அனிதா உதீப் இயக்கும் 90 எம்.எல். படத்தில் நடிக்கிறார் ஓவியா. காமெடி படமான இதற்கு சிம்பு இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காதலர் தினத்தன்று வெளியிட்டனர்.

நடிப்பு
ஹீரோயினை மையமாக வைத்து எடுக்கப்படும் 90 எம்.எல். படத்தில் ஓவியா ஓரினச்சேர்க்கையாளராக நடிக்கிறார் என்ற தகவல் தீயாக பரவியுள்ளது. இது குறித்து அனிதா தான் தெளிவுபடுத்த வேண்டும்.

நித்யா மேனன்
ஓவியா ஓரினச்சேர்க்கையாளராக நடித்தாலும் அதில் என்ன தவறு உள்ளது. கதைக்கு தேவைப்பட்டால் நடிக்க வேண்டியது தானே. நித்யா மேனன் கூட அவே படத்தில் ஓரினச்சேர்க்கையாளராக நடித்துள்ளார்.

சந்தானம்
சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படம் மூலம் இசையமைப்பாளர் ஆனார் சிம்பு. இதையடுத்து ஓவியா படத்திற்கு இசையமைக்கிறார். சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











