ரம்பா மீண்டும் நடிக்க வந்தது கணவரைப் பிரிந்ததாலா?

By Shankar

திருமணமான கையோடு சினிமாவுக்கு பை என்று சொல்லி, போன வேகத்திலேயே மீண்டும் சினிமாவுக்கு திரும்பிய நடிகைகளின் பெரிய பட்டியலில் தானும் இடம்பிடித்துள்ளார் ரம்பா.

தொன்னூறுகளில் தமிழ் சினிமாவில் தொடை தட்டி... ச்சே கொடி கட்டிப் பறந்தவர் ரம்பா.

திவ்யபாரதி க்ளோனிங்

திவ்யபாரதி க்ளோனிங்

தெலுங்கு - இந்தியில் பிரபலமாக இருந்து தற்கொலை செய்து கொண்ட திவ்யபாரதியின் க்ளோனிங் மாதிரி இருந்ததால், தெலுங்கில் திவ்யபாரதி நடித்து பாக்கியிருந்த காட்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டார். பின்னர் தனி ஹீரோயினாக உயர்ந்தார்.

உழவனில் அறிமுகம்..

உழவனில் அறிமுகம்..

தொடையழகி எனப் புகழப்பட்ட ரம்பா அறிமுகமான படம் ‘உழவன்'. அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும், ‘உள்ளத்தை அள்ளித்தா' படம்தான் அவருக்கு நடிகை என்ற உயர்ந்த அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது. அப்படத்தில் இடம்பெற்ற ‘அழகிய லைலா' என்ற பாடலில் இவர் தொடையை காட்டி ஆடிய ஆட்டத்தை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. அதிலிருந்து தமிழ் ரசிகப் பெருங்குடி மக்களுக்கு தொடையழகி ஆகிவிட்டார் ரம்பா.

தொடையை இன்ஷூர் செய்தவர்...

தொடையை இன்ஷூர் செய்தவர்...

இவர் பீல்டில் உச்சத்தில் இருந்தபோது தன் தொடையை ரூ 1 கோடிக்கு இன்ஷூர் செய்ததாக பரபரப்பாகப் பேசப்பட்டது. அது உண்மையா பொய்யா என கடைசி வரை கன்பர்ம் செய்யவே இல்லை ரம்பா!

திருமணம்

திருமணம்

தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்தபோதே கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த ரம்பா, தற்போது நடிகர் சிம்புவுக்கு அக்காவாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இதன்மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வர முடிவு செய்துள்ளார்.

தொடர்ந்து நடிக்க முடிவு

தொடர்ந்து நடிக்க முடிவு

இனிமேல், அக்கா, அண்ணி போன்ற நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கப் போவதாகவும் ரம்பா தெரிவித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஒரு படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கவிருக்கிறாராம். ரம்பா நடிக்கவிருக்கும் படங்கள் பற்றிய விவரங்கள் ஏதும் தெரியவில்லை.

கணவரைப் பிரிந்தாரா?

கணவரைப் பிரிந்தாரா?

ரம்பா தன் கணவரைப் பிரிந்துவிட்டார் என சில மாதங்களுக்கு முன்பே செய்தி வந்தது. அப்போது உடனடியாகப் பதறியடித்துக் கொண்டு மறுப்பு வெளியிட்ட ரம்பா, தான் கணவருடன் மகிழ்ச்சியாக வசிப்பதாகவும் மீண்டும் நடிக்க மாட்டேன் என்றும் தெரிவித்திருந்தார்.

மீண்டும் நடிப்பு

மீண்டும் நடிப்பு

ஆனால் இப்போது மீண்டும் முழு வீச்சில் நடிக்கப் போவதாகவும், தெலுங்கிலும் நடிக்கப் போவதாகவும் கூறியுள்ளார். தமிழ் - தெலுங்கில் நான்கு புதிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

இதற்கிடையில் அவர் கணவரைப் பிரிந்து சென்னைக்கு வந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X