Just In
- 14 min ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 44 min ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 2 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 3 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
- Automobiles
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- Finance
அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. !
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
4 வருஷம் கேப்... மீண்டும் சினிமாவுக்கு ரிட்டர்ன் ஆகும் பிரபல ஹீரோயின்... தமிழுக்கும் வருவாரா?
சென்னை: சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த பிரபல ஹீரோயின், மீண்டும் நடிக்க வருவதாகக் கூறப்படுகிறது.
பிரபல கன்னட நடிகை ரம்யா. இவர் தமிழில் சிம்பு ஹீரோவாக நடித்த குத்து, அர்ஜுன் நடித்த கிரி, தனுஷின் பொல்லாதவன், சூர்யாவின் வாரணம் ஆயிரம், ஜீவாவின் சிங்கம்புலி உட்பட பல படங்களில் நடித்திருந்தார்.
பின்னர் தனது திவ்யா ஸ்பந்தனா என்று மாற்றிக் கொண்டு நடித்து வந்தார். இடையில் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்கவில்லை.
'மாஸ்டரு'க்குப் பிறகு விஜய்யை இயக்கலையாம்... இந்த ஹீரோவைதான் சுதா கொங்கரா இயக்கப் போறாராமே!

தொழிலதிபர்
கடைசியாக, நாகராகாவு என்ற கன்னட படடத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2016 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இவர் போர்ச்சுக்கல்லைச் சேர்ந்த தொழிலதிபர் ரபேலை காதலித்து வந்தார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது இருவரும் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

வதந்தி வேண்டாம்
பின்னர் ரகசிய திருமணம் செய்துகொண்டதாகவும் கூறப்பட்டது. இதை திவ்யாவின் அம்மா மறுத்தார். அவர், திவ்யா, ரகசியமாக நடத்த வேண்டிய அவசியம் இல்லை. திருமணம் பற்றி வதந்தி பரப்ப வேண்டாம். திவ்யா அரசியலில் கவனம் செலுத்தியபோது, ரபேல் தொழிலில் கவனம் செலுத்தினார். இதனால் அவர்கள் அதிகமாக சந்திக்க நேரம் கிடைக்கவில்லை.

பிரிந்து விட்டனர்
திவ்யாவுக்கு, இந்தியாவை விட்டுச் செல்ல விருப்பம் இல்லை. ரபேலுக்கு போர்ச்சுக்கல் நாட்டை விட்டு வர மனமில்லை. இதனால் 2 பேரும் பரஸ்பரம் பேசி பிரிந்துவிட்டனர்' என்று கூறினார். அரசியலில் ஆர்வம் கொண்ட திவ்யா, காங்கிரஸ் சார்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு மாண்டியா நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மீண்டும் நடிக்கிறார்
பிறகு 2014 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதே தொகுதியில் தோல்வி அடைந்தார். இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தார். பா.ஜ.கவை கடுமையாக விமர்சனம் செய்துவந்தார். இந்நிலையில் அவர், இப்போது மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரவேற்பு
கேஜிஎப் உட்பட பல படங்களை நிராகரித்த திவ்யா, இப்போது கன்னடத்தில் தர்ஷன் நடிக்கும் வரலாற்று படம் ஒன்றில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடிப்பாரா என்ற தகவல் தெரியவில்லை. அவர் மீண்டும் நடிக்க வருவதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.