Rashmika: அபுதாபியில் விஜய்யுடன் ராஷ்மிகா பிறந்தநாள் கொண்டாட்டம்.. கண்டுபிடித்த ரசிகர்கள்!

சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனா இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு திரைப்பிரபலங்களும் ஏராளமான ரசிகர்களும் தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அடுத்ததாக அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா நடித்துவரும் புஷ்பா 2 படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் முதல் பாகத்தில் ஸ்ரீவள்ளியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார் ராஷ்மிகா.

குறிப்பாக அய்யா சாமி பாடலில் சிறப்பான ஆட்டத்தை கொடுத்திருந்தார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது புஷ்பா 2 படம் உருவாகி வருகிறது. முதல் பாகத்தில் புஷ்பாவிற்கும் ஸ்ரீவள்ளிக்கும் திருமணம் நடந்த நிலையில், இந்த இரண்டாவது பாகத்தில் அல்லு அர்ஜுனின் மனைவியாக ராஷ்மிகா நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கேற்ப சூட்டிங்கை திட்டமிட்டு வருகிறார் இயக்குநர் சுகுமார். இன்றைய தினம் ராஷ்மிகாவின் பிறந்தநாளையொட்டி அவரது அழகான போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. வரும் 8ம் தேதி அல்லு அர்ஜுன் பிறந்தநாளையொட்டி படத்தில் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Is Rashmika mandanna dating with Vijay Devarakonda in Abu dhabi

நடிகை ராஷ்மிகா மந்தனா: நடிகை ராஷ்மிகா மந்தனா அடுத்தடுத்த முன்னணி ஹீரோக்கள், இயக்குநர்களுடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் பான் இந்தியா படங்களாக வெளியாகி வருகின்றன. இதனால் பான் இந்தியா ஸ்டாராக மாறியுள்ளார் ராஷ்மிகா. தழிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்று வருகிறார் ராஷ்மிகா. பாலிவுட்டிலும் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான அனிமல் படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் ராஷ்மிகாவிற்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

புஷ்பா 2 படம்: அடுத்ததாக அல்லு அர்ஜுன் -சுகுமார் கூட்டணியில் உருவாகிவரும் புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இந்தப் படத்தின் முதல் பாகத்தில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகாவிற்கு திருமணம் நடந்ததாக காட்டப்பட்ட நிலையில், தற்போது இரண்டாவது பாகத்தில் அல்லு அர்ஜுனின் மனைவியாக தான் நடித்து வருவதாக ராஷ்மிகா தனது சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தார். இதனால் படத்தில் தன்னுடைய பொறுப்புகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இன்றைய தினம் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிவரும் சூழலில் புஷ்பா 2 டீம், அவரது கேரக்டர் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

Is Rashmika mandanna dating with Vijay Devarakonda in Abu dhabi

ராஷ்மிகாவின் புஷ்பா 2 போஸ்டர்: இந்த போஸ்டரில் அதிரடியாகவும் அதேநேரத்தில் க்யூட்டாகவும் காணப்படுகிறார் ராஷ்மிகா. ராஷ்மிகா பிரபல தெலுங்குப்பட நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் அவ்வப்போது வெளிநாடுகளில் சுற்றித்திரியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இந்நிலையில் இன்றைய தினம் நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய பிறந்தநாளை அபுதாபியில் கொண்டாடி வருகிறார். இந்நிலையில் அவர் தனது இனஸ்டாகிராமில் மயில் ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மயில் மிகவும் அழகாக இருப்பதாகவும் கமெண்ட் செய்துள்ளார்.

Is Rashmika mandanna dating with Vijay Devarakonda in Abu dhabi

ராஷ்மிகா -விஜய் இன்ஸ்டாகிராம் பதிவு: இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படத்தில் அவருக்கு பின்னால் மயில் ஒன்று காணப்பட்டது. இதையடுத்து இருவரும் ஒன்றாக ராஷ்மிகாவின் பிறந்தநாளை கொண்டாடி வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக இதேபோல சில முறை இவர்கள் இருவரும் டேட்டிங் செய்துவந்த நிலையில் தற்போது மீண்டும் ஒன்றாக அபுதாபிக்கு சென்றுள்ளது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X