நினைத்ததை முடித்த நேஷனல் கிரஷ்.. தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடி இவங்க தானா?

சென்னை: பீஸ்ட் படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில், தளபதி 66 மற்றும் தளபதி 67 உள்ளிட்ட படங்களின் ஹாட் அப்டேட்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் அடுத்த மாதம் ஏப்ரல் 14ம் தேதி கேஜிஎஃப் படத்துடன் போட்டியாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் மார்ச் 20ம் தேதி பீஸ்ட் படத்தின் பிரம்மாண்ட இசைவெளியீட்டு விழா சென்னையில் நடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தளபதி 66

தளபதி 66

தமிழ் மற்றும் தெலுங்கு என பைலிங்குவல் படமாக உருவாக உள்ள தளபதி 66 படத்தை தோழா, மகரிஷி உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி இயக்குகிறார். இந்த மாதமே இந்த படத்திற்கான பூஜை போடப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. பீஸ்ட் படம் வெளியான பிறகு தான் ஏப்ரல் இறுதி வாரத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

டபுள் விஜய்

டபுள் விஜய்

அழகிய தமிழ் மகன், வில்லு, கத்தி படங்களை போல தளபதி 66 படத்திலும் நடிகர் விஜய் டபுள் ஆக்‌ஷனில் ந்டிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒரு விஜய்க்கு வித்தியாசமான நோய் ஒன்றும் உள்ளதாக ஏகப்பட்ட தகவல்கள் படத்தின் கதை தொடர்பாக இப்போதே கிளம்பி உள்ளன. இந்த படத்திற்காக பிரம்மாண்ட வீடு செட் ஒன்றும் சென்னையில் போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஹீரோயின் யார்

ஹீரோயின் யார்

தளபதி 66 படத்தை தயாரிக்கும் வாய்ப்பை தயாரிப்பாளர் தில் ராஜுவுக்கு ஏற்படுத்தி கொடுத்ததே நடிகை கீர்த்தி சுரேஷ் தான் என பேச்சுக்கள் அடிபட்டன. மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக சர்காரு வாரி பாட்டா படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் தளபதி 66 படத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடி இல்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மீண்டும் பூஜா ஹெக்டே

மீண்டும் பூஜா ஹெக்டே

பீஸ்ட் படத்தில் ஒரு பாடலை தவிர விஜய்யுடன் நெருங்கி நடனமாடும் வாய்ப்பு நடிகை பூஜா ஹெக்டேவுக்கு கிடைக்கவில்லையாம். அதனால், ரொம்பவே அவர் ஃபீல் பண்ண அடுத்த படத்திலும் அவர் விஜய்யுடன் இணைந்து நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால், ஏகப்பட்ட நடிகைகள் விஜய் படத்தில் நடித்தே தீர வேண்டும் என்கிற போட்டியில் குதித்துள்ள நிலையில், மீண்டும் பூஜா ஹெக்டே நடிப்பாரா என்பது கேள்விக் குறி தான்.

நினைத்ததை முடித்த நேஷ்னல் கிரஷ்

நினைத்ததை முடித்த நேஷ்னல் கிரஷ்

மாஸ்டர், பீஸ்ட் என ஒவ்வொரு முறையும் எப்படியாவது விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்து விட வேண்டும் என நினைத்து வந்த நேஷ்னல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவுக்கு தான் அந்த ஜாக்பாட் அடித்திருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. ஷங்கர் படத்தில் கியாரா அத்வானி பிசியாக இருப்பதால், புஷ்பா பட ஹீரோயின் ராஷ்மிகாவையே தளபதி 66 படத்துக்கும் ஹீரோயினாக புக் செய்து விடலாம் என படக்குழு ஒரே முடிவுடன் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் இன்னொரு ஹீரோயினுக்கும் வாய்ப்பிருக்கலாம் என்கிற பேச்சுக்களும் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X