சாய்பல்லவிக்கு திருமணமான நடிகருடன் உறவா? யார் அந்த நடிகர்.. புதுகதையா இருக்கே!
சென்னை: பொதுவாகவே திரையுலகில் நடிக்கின்ற நடிகை மற்றும் நடிகர்கள் குறித்து அவ்வப்போது கிசுகிசுக்கள் வெளி வருவது சகஜமான ஒன்றுதான். அப்படி அடிக்கடி கிசு கிசுவில் சிக்கி வரும் சாய்பல்லவி பற்றி, திருமணமாகி குழந்தை இருக்கும் நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கிசு கிசு ஒன்று சோஷியல் மீடியாவில் ரவுண்டுகட்டி பரவி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நிகழ்ச்சியில் நடனமாடி மீடியாவில் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார் நடிகை சாய் பல்லவி. அதன்பிறகு 2015ம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

நடிகை சாய் பல்லவி: தமிழ்நாட்டை சொந்த ஊராகக் கொண்டிருக்கும் நடிகை சாய்பல்லவிக்கு தமிழை விட தெலுங்கு சினிமாவில் தான் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதால், தொடர்ந்து எண்ணற்ற தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கு சினிமாவின் பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். ஒன்று இரண்டு படத்தில் சேர்ந்து நடித்துவிட்டாலே கிசு கிசு வலம்வரத் தொடங்கிவிடும் அந்த வகையில், சமந்தாவின் முன்னாள் கணவரும் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் இவரும் காதலிப்பதாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு கிசுகிசுக்கள் வெளியானது.
கிசுகிசு: இதற்கு காரணம் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த லவ் ஸ்டோரி திரைப்படத்தில் இவர்களுக்கு இடையிலான கெமிஸ்ட்ரி பக்காவாக இருந்ததால், இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என கொளுத்தி போட்டார்கள் நெட்டிசன்கள். காலப்போக்கில் இதுவெறும் கிசுகிசுதான் என அவர்களது ரசிகர்களும் புரிந்து கொண்டார்கள். அதுமட்டுமில்லாமல் தனுஷூடன் மாரி படத்தில் சேர்ந்து நடித்த போதும், அவருடன் இணைந்து பேசப்பட்டார்.
திருமணமான நடிகருடன் உறவா: இதைத் தொடர்ந்து தற்போது சாய்பல்லவி குறித்து, மீண்டும் ஒரு கிசுகிசு பரவி வருகிறது. நடிகை சாய் பல்லவி நடிகர் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார் என்றும், அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது என்றும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் உள்ள ஊடகங்களில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. சாய்பல்லவி குறித்து பரவும் வதந்தியால் கடுப்பான அவரின் பேன்ஸ், அவரின் வளர்ச்சியை தாங்கிக்கொள்ள முடியாத விஷமிகள் செய்யும் வேலை இது என்று கருத்துக்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











