சமந்தா நடிக்கவிருந்த படத்தில் நடிக்கும் நயன்தாரா.. அப்போ ஷாருக்கானுக்கு ஜோடி சமந்தாவா? செம கனெக்ட்!
சென்னை: மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கிய இயக்குநர் அஸ்வின் சரவணன் படத்தில் உருவாக உள்ள கனெக்ட் திரைப்படத்தில் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கப் போவதாக அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று ஃபர்ஸ்ட் லுக்குடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
நயன்தாராவை வைத்து மாயா, டாப்சியை வைத்து கேம் ஓவர், எஸ்.ஜே. சூர்யாவின் இரவாக்காலம் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக சமந்தாவை இயக்கப் போவதாகத் தான் பேச்சுக்கள் அடிபட்டன.
ஆனால், திடீரென இந்த மாற்றம் எப்படி நடந்தது என்கிற கேள்வி கோலிவுட்டில் கிளம்பி இருக்கிறது.

மிரட்டிய மாயா
மாயா திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வின் சரவணன். பிக் பாஸ் ஆரி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான அந்த திரைப்படம் வித்தியாசமான பேய் படமாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்திற்கு பிறகு தான் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நயன்தாரா.

ஒரே கொண்டாட்டம் தான்
நேற்று நள்ளிரவில் தொடங்கி இன்று முழுவதும் நயன்தாராவின் பிறந்தநாள் கொண்டாட்டம் வேற லெவலில் களைகட்டியது. காதலர் விக்னேஷ் சிவன் உடனும் காத்துவாக்குல ரெண்டு காதல் படக்குழுவினரான விஜய்சேதுபதி மற்றும் சமந்தாவுடனும் கேக் வெட்டி பர்த்டேவை கொண்டாடினார் லேடி சூப்பர் ஸ்டார்.

நயன்தாராவின் கனெக்ட்
காதலிக்கு பிறந்தநாள் பரிசு கொடுப்பது போல ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாக உள்ள அடுத்த படத்தின் அறிவிப்பை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார். ஏற்கனவே ரவுடி பிக்சர்ஸ் பேனரில் கவினின் ஊர் குருவி படம் உருவாகி வரும் நிலையில், அடுத்ததாக இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கப் போகும் கனெக்ட் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஃபர்ஸ்ட் லுக்குடன் இன்று வெளியானது.

சமந்தா நடிப்பதாக
டாப்சியின் கேம் ஓவர் திரைப்படத்தை பார்த்து விட்டு பிடித்துப் போன நடிகை சமந்தா அஸ்வின் சரவணன் இயக்கத்தில் பேய் படத்தில் நடிக்கப்போவதாக சில மாதங்களுக்கு முன்னதாக செய்திகள் வெளியாகின. ஆனால், திடிரென்று சமந்தாவுக்கு பதிலாக இந்த படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார் என்கிற அறிவிப்பு சமந்தா ரசிகர்களை ஏமாற்றி உள்ளது.

ஷாருக்கான் ஜோடி சமந்தாவா
சமந்தாவின் பேய் பட கதையில் நயன்தாரா கமிட் ஆகி உள்ள நிலையில், இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாக உள்ள பாலிவுட் படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக சமந்தா நடிக்கப் போகிறாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால், மகன் ஆர்யான் கானை போதைப் பொருள் விவகாரத்தில் இருந்து முழுவதுமாக விடுவிக்கும் வரையில் ஷாருக்கான் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடப் போவதில்லை என்றே பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

நல்ல கனெக்ட்
நடிகை சமந்தா மற்றும் நயன்தாரா இடையே நல்ல கனெக்ட் இருந்து வருவதாகவும் இருவரும் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வரும் நிலையில், தோழிகளாகவே சுற்றி வருகின்றனர் என்பதாலும், சமந்தாவுக்கு இயக்குநர் அஸ்வின் சரவணன் சொன்ன கதையை நயன்தாராவின் பேனரில் நயன்தாராவே நடிக்க சமந்தா சம்மதம் தெரிவித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. அடுத்த மாதம் இருவரும் இணைந்து எப்படி நடிச்சிருக்காங்க என்பதை காண ரசிகர்கள் வெயிட்டிங்!


Click it and Unblock the Notifications











