நடிகை சமந்தாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி? மேலாளர் பரபரப்பு விளக்கம்!

சென்னை: நடிகை சமந்தா திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் குறித்து அவரது மேலாளர் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, கடந்த அக்டோபர் மாதம் தனது கணவரான நடிகர் நாக சைதன்யாவை பிரிந்தார்.

இருவருமே பரஸ்பரம் பிரிவதாக தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டனர். அதனை தொடர்ந்து மன அமைதிக்காக ஆன்மிக சுற்றுலா சென்றார் நடிகை சமந்தா.

உடல் நலக்குறைவு

உடல் நலக்குறைவு

அந்த போட்டோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. இதனை தொடர்ந்து தமிழ் தெலுங்கு மற்றும் ஹாலிவுட் படங்களிலும் கமிட் ஆகியுள்ளார் நடிகை சமந்தா. இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மருத்துவமனனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

மேலாளர் விளக்கம்

மேலாளர் விளக்கம்

அதோடு நடிகை சமந்தா சீரியஸாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சமந்தாவின் மேலாளரான மஹேந்திரா தீயாய் பரவி வரும் இந்த தகவல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நடிகை சமந்தா ஃபுளு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். முன்னதாக நடிகை சமந்தா, டிசம்பர் 13 ஆம் தேதி, ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு கடை திறப்பு விழாவிற்காகச் சென்றார் சமந்தா.

திருப்பதி கோவிலில் தரிசனம்

திருப்பதி கோவிலில் தரிசனம்

நிகழ்ச்சிக்குப் பிறகு, கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவுக்குச் சென்று ஆசிர்வாதம் வாங்கினார். அதற்கு முன் சமந்தா திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். இந்நிலையில் அவருடைய விளம்பரதாரரான வம்சி சேகரும் சமந்தாவின் உடல்நிலை குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார. அவர் பதிவிட்டுள்ள டிவீட்டில் "சமந்தா பூரண நலமாக உள்ளார்.

வதந்திகளை நம்ப வேண்டாம்

வதந்திகளை நம்ப வேண்டாம்

அவருக்கு லேசான இருமல் இருந்ததால், ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் நேற்று சில பரிசோதனைகளை மேற்கொண்டார். தற்போது அவர் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். வதந்திகளை நம்ப வேண்டாம். சமந்தா முற்றிலும் நலமுடன் உள்ளார். ." என பதிவிட்டுள்ளார். நடிகை சமந்தா கடைசியாக தி ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் நடித்திருந்தார்.

விரைவில ரிலீஸ்

விரைவில ரிலீஸ்

தற்போது தான் நடித்துள்ள இரண்டு படங்களின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார் நடிகை சமந்தா. அதாவது குணசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஷகுந்தலம் மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன.

More from Filmibeat

Read more about: samantha சமந்தா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X