சர்ச்சை பதிவால் சமந்தா இன்ஸ்டாகிராம் முடுக்கப்பட்டதா? மேனேஜர் தந்த விளக்கம்!

சென்னை : நடிகை சமந்தா இந்திய அளவில் சிறப்பான நடிகையாக காணப்படுகிறார்.

மேலும் இன்ஸ்டாகிராமிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது சமீபத்திய போஸ்ட்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

இவரது சமீபத்திய போஸ்ட்களில் கவர்ச்சி தூக்கலாகத்தான் காணப்பட்டன.

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

நடிகை சமந்தா இந்திய அளவில் சிறப்பான நடிகையாக மாறியுள்ளார். சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் இவர் நடித்திருந்தார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார். இவரது கதீஜா என்ற கேரக்டர் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தற்போது சமந்தா கைவசம் யசோதா, குஷி ஆகிய படங்கள் உள்ளன. இந்தப் படங்களின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகினற்ன. இந்நிலையில் அடுத்ததாக பாலிவுட் படங்களிலும் சமந்தா கமிட்டாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இன்ஸ்டாகிராம் பதிவுகள்

இன்ஸ்டாகிராம் பதிவுகள்

படங்களில் மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களிலும் சமந்தா பெஸ்ட்டாகத்தான் இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிடும் பகிர்வுகள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகின்றன. சமீப காலங்களில் கவர்ச்சித் தூக்கலாக இவர் பல போட்டோஷுட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

சமந்தாவின் சுதந்திரம்

சமந்தாவின் சுதந்திரம்

முன்னதாக ஷாருக்கின் ஜவான் படத்தில் நடிக்க சமந்தாவைத்தான் படக்குழு முதலில் அணுகியதாகவும், ஆனால் அப்போது கணவருடன் அவர் இணைந்து இருந்த நிலையில் அதுகுறித்து முடிவெடுக்க முடியாமல் அந்த வாய்ப்பை தவிர்த்ததாகவும் கூறப்பட்டது. அத்தகைய கட்டுப்பாட்டில் இருந்த சமந்தா, தற்போது தன்னுடைய சுதந்திரத்தை சிறப்பாக அனுபவித்து வருவதாக கூறப்படுகிறது.

ஹேக் செய்யப்பட்டதா?

ஹேக் செய்யப்பட்டதா?

இதுவும் இவரது கவர்ச்சிப் புகைப்படங்களுக்கு காரணமாக அமைந்துள்ளன. மேலும் பட வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும் இந்த கவர்ச்சி போட்டோஷுட்களை இவர் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் நேற்றைய தினம் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

மேனேஜர் விளக்கம்

மேனேஜர் விளக்கம்

அதற்கு ஏற்றாற்போல அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் அவருக்கு சம்பந்தமில்லாத புகைப்படங்கள் காணப்பட்டன. இதுகுறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், சமந்தாவின் மேனேஜர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவரது பக்கம் ஹேக் செய்யப்படவில்லை என்றும் தொழில்நுட்ப காரணங்களால் தவறான பதிவுகள் அவரது பக்கத்திற்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் பரபரப்பு

ரசிகர்கள் பரபரப்பு

மேலும் இன்ஸ்டாகிராம் வல்லுநர்களின் உதவியுடன் இதை சரிசெய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் சமந்தா. அவரது பக்கத்தில் இத்தகைய பிரச்சினை காணப்படுவது அவரது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X