Don't Miss!
- News
மக்களே உஷார்.. டிஜிபி சைலேந்திரபாபு பெயரில் போலி எஸ்எம்எஸ் .. ஏமாற வேண்டாம் என போலீஸ் எச்சரிக்கை
- Finance
அட இது ரொம்ப நல்ல விஷயமாச்சே.. ரூபாயின் மதிப்பு மீண்டும் ஏற்றம்.. என்ன காரணம்?
- Sports
"தனிமையில் சிக்கி தவிக்கிறேன்".. விராட் கோலியின் உருக்கமான பேச்சு.. ரசிகர்கள் சோகம் - விவரம்!
- Lifestyle
ஒயிட் சாஸ் பாஸ்தா
- Technology
ஒன்றா, இரண்டா குறிப்பிடுவதற்கு? பட்ஜெட் விலையில் அறிமுகமான Noise ColorFit Ultra ஸ்மார்ட்வாட்ச்!
- Automobiles
இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு... உச்சகட்ட எதிர்பார்ப்பில் மஹிந்திரா ஸ்கார்பியோ ரசிகர்கள்! எதற்காக தெரியுமா?
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சியா...சமந்தா என்ன சொல்லிருக்கார் தெரியுமா ?
சென்னை : விஜய் தேவரகொண்டாவுடன் லிப்லாக் சீனில் நடிக்க சமந்தா ஓகே சொன்னதாக தகவல் வெளியானதால், டோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இவருக்கு மட்டும் எப்படி சமந்தா ஓகே சொன்னார் என அனைவரும் ஆச்சரியமாக கேட்டு வருகின்றனர்.
முன்னணி நடிகைகள் பலர் திருமணத்திற்கு பிறகு லிப் லாக் சீன்களில் நடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என அனைத்திலும் இதே நிலை தான். பாலிவுட்டில் தீபிகா படுகோன் முதல் பல நடிகைகளும் லிப் லாக் சீன்களுக்கு நோ சொல்லி வருகிறார்கள்.
நடிகை சமந்தாவும் இதையே கடைபிடித்து வருகிறார். டைரக்டர் சிவ நிர்வானா இயக்கிய மஜிலி படத்தில் நாக சைதன்யாவுடன் லிப் லாக் சீனில் நடித்தார் சமந்தா. திருமணத்திற்கு பிறகும் கணவருடன் நடித்த படங்களில் மட்டுமே லிப் லாக் காட்சிகளில் சமந்தா நடித்தார்.
வில்லன்
அஜித்...
ஹீரோ
விஜய்...
வெறித்தனமான
ட்ரெயிலர்...
மிரண்ட
பிரேம்ஜி!

குஷி படத்தில் சமந்தா
தற்போது மீண்டும் சிவ நிர்வானா இயக்கும் குஷி படத்தில் நடிக்கிறார் சமந்தா. விஜய் தேவரகொண்டா, சமந்தா லீட் ரோலில் நடிக்கிறார்கள். காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் தேவரகொண்டா ஏற்கனவே லிப் லாக் சீன்களுக்கு பெயர் போனவர். அதனால் குஷி படத்திலும் லிப்லாக் சீன் இருக்கும் என கூறப்படுகிறது.

விஜய் தேவரகொண்டாவுடன் லிப்லாக்
விஜய் தேவரகொண்டாவுடன் லிப்லாக் சீனில் நடிக்க சமந்தாவிடம் கேட்கப்பட்டுள்ளதாம். இதுவரை தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் மட்டுமே லிப்லாக் சீன்களில் நடித்துள்ளார் சமந்தா. இதனால் விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் சீனில் நடிக்க சமந்தா ஓகே சொல்வாரா என்பதை அனைவரும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர்.

சமந்தா என்ன சொல்லி இருக்கிறார்
ஒருவேளை விஜய் தேவரகொண்டாவுடன் லிப் லாக் காட்சிகளில் நடிக்க சமந்தா ஓகே சொல்லி விட்டால் அது தெலுங்கு சினிமாவில் மிகப் பெரிய புரட்சியகரமான விஷயமாகவே பார்க்கப்படும். ஆனால் படக்குழுவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறும் தகவலின் படி, லிப் லாக் காட்சிகளில் நடிக்க நோ சொல்லி விட்டாராம் சமந்தா. இந்த படத்தில் மட்டுமல்ல இனி ஒரு போதும் அது போன்ற சீன்களில் நடிக்க மாட்டேன் என சொல்லி விட்டாராம்.

தீவிர யோசனையில் டைரக்டர்
புஷ்பா படத்தில் ஓ அன்டவா பாடலுக்கு தாராள கவர்ச்சி காட்சி அயிட்டம் சாங்கிற்கு சமந்தா நடனமாடியதால், லிப் லாக் காட்சிகளுக்கு ஓகே சொல்வார் என நினைத்து தான் டைரக்டர் சமந்தாவிடம் கேட்டாராம். ஆனால் அவர் திட்டவட்டமாக முடியாது என சொல்லி விட்டாராம். இதனால் அடுத்து என்ன செய்யலாம். லிப் லாக் சீன் இல்லாமலே படத்தை எடுக்கலாமா என யோசித்து வருகிறாராம் டைரக்டர்.
-
2021ம் ஆண்டின் சிறந்த படங்கள்.. கர்ணன், டாக்டர், மாஸ்டர்.. சைமாவில் மாஸ் காட்டும் தமிழ் படங்கள்!
-
“அதிதியிடம் தோற்றதில் மகிழ்ச்சி, விட்டுக்கொடுத்து செல்வதுதன் அழகு”: விருமன் சக்சஸ்மீட்டில் கார்த்தி
-
லோகேஷ் யுனிவர்ஸ் மாதிரி இப்ப கெளதம் யுனிவர்ஸ்: இங்கேயும் கமல் தான் வேட்டையாடி விளையாடப் போறாராம்!