போலீஸ் உடையில் மாஸ் காட்டும் ஷிவானி நாராயணன்.. விக்ரம் படத்தில் இந்த ரோல் தானா? ரசிகர்கள் கேள்வி!

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன் போலீஸ் உடையில் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

இன்ஸ்டாகிராம் இளவரசியாக வலம் வரும் ஷிவானி நாராயணன் புகைப்படங்கள் வெளியானாலே தீயாய் பரவி விடுகிறது.

உலக நாயகனின் விக்ரம் படத்தில் நடித்து வரும் ஷிவானி நாராயணன் இந்த ரோலில் தான் நடிக்கிறாரா? என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

இளம் போட்டியாளர்

இளம் போட்டியாளர்

இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பலரும் சற்றே வயது அதிகமான போட்டியாளர்கள் தான். ஆனால், 19வயதே ஆன ஷிவானி நாராயணன் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக கடந்த சீசனில் நுழைந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இந்த சீசனில் ஷிவானி நாராயணன் அளவுக்கு ஒரு போட்டியாளர் கூட இல்லையே என இளைஞர்கள் கடுப்பாகியது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் படத்தில்

விக்ரம் படத்தில்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு பல போட்டியாளர்கள் சினிமாவில் பெரிய பெரிய வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். சிலர் அந்த வாய்ப்பை பயன்படுத்த தெரியாமல் காணாமல் கூட போயுள்ளனர். ஆனால், ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்திலேயே நடித்து வரும் தகவல் ஒட்டுமொத்த ரசிகர்களையும் சந்தோஷப்படுத்தியது.

5 மணி பஸ்

5 மணி பஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே கடந்த 2020ல் லாக்டவுன் போடப்பட்ட நிலையில், தினமும் சரியாக 4 அல்லது 5 மணிக்கு புதிய கவர்ச்சி புகைப்படங்களையும் நடனம் ஆடும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்து வந்தார். 2 மில்லியன் ரசிகர்களுடன் பிக் பாஸ் வீட்டுக்குள் கெத்தாக உள்ளே நுழைந்த ஷிவானி நாராயணன் தற்போது 3.1 மில்லியன் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமை கலக்கி வருகிறார்.

போலீஸ் உடையில்

போலீஸ் உடையில்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் பிசியாகி வரும் ஷிவானி நாராயணன் எப்போதாவது தான் தற்போது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தபடியே போலீஸ் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.

வாவ் சொன்ன பிக் பாஸ் பிரபலம்

வாவ் சொன்ன பிக் பாஸ் பிரபலம்

ஷிவானி நாராயணன் டிசர்ட் மற்றும் போலீஸ் உடையான காக்கி பேன்ட் மற்றும் பெல்ட் அணிந்து கொண்டு செம ஹாட்டாக லுக் விடும் புகைப்படத்தை பார்த்த நடிகை வாணி போஜன் ஹார்ட்டீன் போட்டுள்ளார். பிக் பாஸ் பிரபலமான சம்யுக்தா வாவ் சொல்லி உள்ளார். லட்சக் கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகிறது.

போலீஸ் அதிகாரியா

போலீஸ் அதிகாரியா

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், விக்ரம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறீங்களா என்றும் இல்லை வேறு ஏதாவது ரியாலிட்டி ஷோவில் இந்த கெட்டப்பில் வரீங்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். சீக்கிரமே ரசிகர்களின் கேள்விக்கான பதிலை ஷிவானி சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X