சமந்தாவின் அக்காவான ஸ்னேகா!
நடிகை சமந்தாவின் அக்காவாம் நடிகை சினேகா. நிஜத்தில் இல்லை, இது தெலுங்கு சினிமாவிற்காகவாம்.
தமிழ் படங்களில் பிரபலமாக இருந்த சினேகா, தெலுங்கில் 20க்கும் மேற்பட்ட நடித்துள்ளார். உன் சமையல் அறையில் படத்தின் தெலுங்கு பதிப்பான உலவச்சரு பிரியாணி படத்தில் கடைசியாக நடித்தார்.
பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டபின்னர் விளம்பரங்களில்தான் அதிகம் நடிக்கிறார். சினிமா வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. சின்னத்திரையில் நிகழ்ச்சி நடத்தப்போனார் அதுவும் சரியாக வரவில்லை போல. எனவே மீண்டும் சினிமாவில் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

சமந்தா நாயகி
தற்போது திருவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சினேகா. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிக்கிறார். சமந்தாதான் கதாநாயகி. இன்னொரு ஹீரோயினாக ஆத் ஷர்மா நடிக்கிறார்.

அக்கா சினேகா
சினேகாவுக்கு தற்போது தமிழில் கைவசம் படங்கள் எதுவுமில்லை. சரத்குமாருடன் நடித்த விடியல் பாடம் பாதியில் நிற்கிறது. எனவேதான் வந்த வாய்ப்பை விடாமல் ஒத்துக்கொண்டாராம். இதில் சினேகா சமந்தாவின் அக்காவாக நடிப்பதாக கூறப்படுகிறது.

கல்யாணம் ஆயிட்டாலே
நடிகைகளுக்கு திருமணம் ஆகிறவரைக்கும்தான் ஹீரோயின் வேடம் கிடைக்கும், திருமணம் ஆகிவிட்டாலே, அக்கா,அண்ணி, அத்தை, ஏன் அம்மா வேடம்தான் கிடைக்கும் என்பது சிநேகாவிற்கு தெரியாதா என்ன?

தேவி ஸ்ரீ பிரசாத் இசை
இந்தப் படத்தை டி.டி.வி.தன்யா, ராதா கிருஷ்ணா ஆகியோர் ஹாசினி கிரியேஷன் பேனரில் தயாரிக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறாராம்.


Click it and Unblock the Notifications











