திடீர் போஸ்ட்டால் பரபரப்பு.. இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறாரா பிரபல முன்னாள் ஹீரோயின்..?

By

சென்னை: பிரபல நடிகை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

செல்வராகவன் இயக்கிய 'காதல் கொண்டேன்' மூலமாக தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சோனியா அகர்வால்.

இந்தப் படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படமும் இதன் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.

காதல் திருமணம்

காதல் திருமணம்

இந்தப் படத்துக்குப் பிறகு சக்சஸ், ஹரி இயக்கத்தில் சிம்பு நடித்த கோவில், விஜய்யின் மதுர, செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, ஶ்ரீகாந்துடன் ஒரு நாள் ஒரு கனவு, சுசி கணேசனின் திருட்டு பயலே உள்பட பல படங்களில் நடித்தார். இந்நிலையில் இயக்குனர் செல்வராகவனை காதலித்து வந்த அவர், கடந்த 2006 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.

விவாகரத்து

விவாகரத்து

திருமணத்துக்குப் பின் நடிப்பதை நிறுத்தினார் சோனியா. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2010 ஆம் ஆண்டில் செல்வராகவனை விவாகரத்து செய்தார். அதற்க்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். வேதம் படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குத் திரும்பிய அவர், குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார் இப்போது. கடைசியாக அயோக்யா படத்தில் நடித்திருந்தார்.

திருமண போட்டோ

திருமண போட்டோ

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் நடித்து வரும் சோனியா அகர்வால், தனது சமூக வலைதளப் பக்கத்தில் திருமண போட்டோ ஒன்றை இப்போது பதிவிட்டுள்ளார். அதில் இன்னும் 3 நாட்களில் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் அவர் மறுமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் அதனால்தான் இப்படி போஸ்ட் போட்டிருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

படத்துக்கான புரமோஷனா?

படத்துக்கான புரமோஷனா?

ஆனால், இது புதிய திரைப்படம் பற்றிய புரமோஷனாகவும் இருக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர். இதையடுத்து அவருக்கு வாழ்த்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தப் போஸ்ட் வைரலாகி வருகிறது. சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த இயக்குனர் செல்வராகவன், அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை 2011 இல் திருமணம் செய்து கொண்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X