ஸ்ரீரெட்டிம்மா.. இதெல்லாம் தேவையா.. கொஞ்சம் ஓவரா இருக்கே
நடிகை ஸ்ரீ ரெட்டி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் செல்பி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகை ஸ்ரீ ரெட்டி தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ விமர்சனக்கு ஆளாகியுள்ளது.
பேஸ்புக் மூலம் திரைத்துறையினர் மீது பாலியல் புகார் கூறி பிரபலமானவர் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி. சமூக வலைதளங்களை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியே அவர் பிரபலமானார்.
முதலில் அவரது போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்தனர். பின்னர் ஸ்ரீ ரெட்டியிடம் இருந்து பலரும் விலகிவிட்டனர். இதற்கு காரணம் அவருடைய சமூக வலைதளகப் பதிவுகள் தான்.
சமீபகாலமாக அவர் வெளியிட்டு வரும் செல்பி வீடியோக்கள் மிக மோசமாக இருக்கின்றன. குறிப்பாக தனது உடல் பாகங்கள் எதையாவது க்ளோசப்பில் போட்டு எடுத்து, அதை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு "இது எந்த இடம் கண்டுபிடியுங்கள்" என கேள்வி எழுப்புகிறார்.

செக்ஸி வீடியோ
மேலும் தன்னுடைய உடலை மிக செக்சியாக செல்பி வீடியோ எடுத்தும் பதிவிட்டு வருகிறார். இது அவரை பின்தொடர்பவர்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறார் போலும். இதன் மூலமாக தனக்கு நிறைய பட வாயப்புகள் வரும் என நினைக்கிறார் ஸ்ரீ ரெட்டி.
மோசம்
ஆனால் அவர் தொடர்ந்து போட்டு வரும் பதிவுகள் முகம் சுளிக்க வைப்பதாக உள்ளன. மோசமாகவும் உள்ளன. சர்ச்சையையும் கிளப்புகின்றன.

தமிழ் படங்கள்
தற்போது அவர் ரெட்டி டைரிஸ் உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார். மேலும் சென்னையின் புதிதாக வீடு கட்டி குடியேறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கால் டாக்சிக்கு கூட காசில்லாமல் சென்னை வந்தவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என்ற கேள்வியும் ஒருபுறம் இருக்கிறது.

கவர்ச்சி படம் வெளியிடும் நடிகைகள்
சமீபகாலமாக நடிகைகள் தங்களுடைய கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். ஒரு சில நடிகைகள் சிகரெட், சரக்கு பாட்டிலுடன் போட்டோ போட்டு சர்ச்சை ஏற்படுத்துகின்றனர். அந்த வரிசையில் தன்னையும் இணைத்துக்கொள்ள விரும்புகிறார் ஸ்ரீ ரெட்டி என்பது தெளிவாகிறது.


Click it and Unblock the Notifications











