ஒரு படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கா அரசு வீக்கா உள்ளது: வரலட்சுமி 'பாப்பா' பொளேர்
சென்னை: ஒரு படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கா அரசு வீக்காக உள்ளது என்று கேள்வி எழுப்பியுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
சர்கார் படத்தில் வரும் சில காட்சிகளுக்கு அதிமுக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவற்றை நீக்க வைத்துள்ளது. இதை பார்த்து விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து வரலட்சுமி சரத்குமார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

பயம்
ஒரு படத்தை பார்த்து பயப்படும் அளவுக்கா அரசு வீக்காக உள்ளது? எதை நீங்கள் செய்யக் கூடாதோ அதை செய்து உங்களின் நிலையை மோசமாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். #vandalising இது போன்ற முட்டாள்தனத்தை செய்வதை தவிர்க்கவும். இது கற்பனை சுதந்திரம் #ISupportARMurugadoss #SarkarVsTNSarkar என்று தெரிவித்துள்ளார்.
மியூட்
படத்தில் வரலட்சுமியின் இயற்பெயரான கோமளவள்ளியை மியூட் செய்ய வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் கட்சியினர் அளித்த இலவச பொருட்களை தீயில் போடும் காட்சியும் நீக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் எதிர்ப்பு கிளம்பியதால் மீண்டும் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.
ஷேர்
சர்கார் படத்தில் நீக்கப்பட்ட காட்சியை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்து வருகிறார்கள்.
ஆதரவு
விஜய் ரசிகர்கள் ஒரே மாதிரியான டிபி வைத்து சர்காருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











