For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சமந்தாவின் விவாகரத்து வதந்திக்கு இது தான் காரணமா...குழப்பத்தில் ரசிகர்கள்

  |

  ஐதராபாத் : தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா, முன்னணி நடிகர் நாகர்ஜுனாவின் மூத்த மகனான நாக சைதன்யாவை காதலித்து, 2017 ல் திருமணம் செய்து கொண்டார். கவுதம் மேனன் இயக்கிய விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சீசாவே படத்தில் நடிக்கும் போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

  சினிமாவில் இருந்து திடீர் ஓய்வு.. கர்ப்பமா? குவியும் வாழ்த்து.. மவுனம் காக்கும் காஜல் அகர்வால்! சினிமாவில் இருந்து திடீர் ஓய்வு.. கர்ப்பமா? குவியும் வாழ்த்து.. மவுனம் காக்கும் காஜல் அகர்வால்!

  கோவாவில் இவர்களின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் ரொம்ப பிஸியாக பல படங்களில் நடித்து வந்தார் சமந்தா. கணவர் நாக சைதன்யாவுடன் இணைந்து பல விளம்பரங்களிலும் நடித்து வந்தார். சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

  படங்களை குறைத்த சமந்தா

  படங்களை குறைத்த சமந்தா

  ஓ பேபி படத்திற்கு பிறகு புதிய படங்களில் கையெழுத்திடுவதை குறைத்து வந்த சமந்தா, சமீபத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, சில மாதங்கள் பிரேக் எடுத்துக் கொள்ள தான் விரும்புவதாக தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிரேக்கிற்கு என்ன காரணம் என சமந்தா கூறாததால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல விதமாக தகவல் பரவியது.

  அக்கினேனி பெயர் நீக்கம்

  அக்கினேனி பெயர் நீக்கம்

  இதற்கிடையில் சோஷியல் மீடியா பக்கங்களில் தனது டிஸ்பிளே பெயரில் இருந்த அக்கினேனியை சமந்தா நீக்கினார். இதனால் அவருக்கும், நாக சைதன்யாவிற்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாகவும், அதனால் தான் சமந்தா தனது பெயரின் பின்னால் இருந்த அக்கினேனியை நீக்கி விட்டார் என்றும் பல விதங்களில் மீடியாக்களில் தகவல் பரவியது.

  தனி வீட்டில் வசிக்கும் சமந்தா

  தனி வீட்டில் வசிக்கும் சமந்தா

  அதைத் தொடர்ந்து, சமந்தாவும், நாக சைதன்யாவும் பல மாதங்களாக பிரிந்து வேறு வேறு வீட்டில் வசித்து வருவதாகவும், அவர்களை சேர்த்து வைக்க குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் என பலரும் முயற்சித்து வருவதாகவும் கூறப்பட்டது. இது பற்றி சமந்தாவிடம் கேட்டதற்கு, எப்போது பேச வேண்டுமோ அப்போது எனது கருத்தை தெரிவிப்பேன் என்றார்.

  பொதுவாக வாழ்த்து

  பொதுவாக வாழ்த்து

  இரண்டு நாட்களுக்கு முன் நாக சைதன்யா, சாய் பல்லவியுடன் இணைந்து நடித்த லவ் ஸ்டோரி படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இதற்கு சமந்தா என்ன போஸ்ட் செய்வார் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். டிரைலர் வெளியாகி பல மணி நேரங்களுக்கு பிறகு கருத்து பதிவிட்ட சமந்தா, சாய் பல்லவியின் பெயரை மட்டும் குறிப்பிட்டதுடன் பொதுவாக லவ் ஸ்டோரி வெற்றி பெற படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் என்று மட்டும் பதிவிட்டார். நாக சைதன்யாவும் நன்றி சாம் என பதில் ட்வீட் செய்தார்.

  கணவர் பெயரை சொல்லாதது ஏன்

  கணவர் பெயரை சொல்லாதது ஏன்

  சாய் பல்லவியின் பெயரை குறிப்பிட்ட சமந்தா ஏன் தனது கணவர் நாக சைதன்யாவின் பெயரை குறிப்பிடவில்லை என கேள்வி எழுந்தது. இதனால் அவர்கள் இருவரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பது உண்மை தான் என பலரும் கன்ஃபார்ம் செய்தனர். சட்டப்படி விவாகரத்து பெறுவதற்கான நடவடிக்கைகளும் கோர்ட்டில் துவங்கி விட்டதாக வேறு கூறப்பட்டது. ஏற்கனவே பரவி வரும் விவாகரத்து வதந்தியை மேலும் கொழுந்து விட்டு எரிய வைத்தது சமந்தாவின் ட்வீட்.

  எதுப்பா உண்மை

  எதுப்பா உண்மை

  ஆனால் விவாகரத்து என கூறப்படுவது வதந்தி என்ற ஒரு தகவலும் கூறப்பட்டது. சமந்தாவும், நாக சைதன்யாவும் இணைந்து கோவா மற்றும் மும்பையில் புதிதாக வீடு வாங்கி உள்ளதாகவும், தாங்கள் உல்லாசமாக பொழுதை கழிக்கவே இந்த வீடுகளை அவர்கள் வாங்கி வருவதாகவும் கூறப்பட்டது. இதனால் விவாகரத்து என சொல்லப்படுவது உண்மையா, இருவரும் காதலுடன் ஒன்றாக இருப்பது உண்மையா என தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர்.

  இது தான் காரணமா

  இது தான் காரணமா

  ஆனால் இருவருக்கும் நெருக்கமாக வட்டாரங்கள் வேறு விதமாக காரணம் சொல்கிறார்கள். இந்த நட்சத்திர காதல் ஜோடி, குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளதாம். அதற்காக தான் சமந்தா படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, சிறிது காலம் பிரேக் எடுக்க போவதாக கூறினாராம். தற்போது தெலுங்கில் நடித்து வரும் புராண படமான சாகுந்தலம் படத்தின் ப்ரோமோவிற்காக தான் சமந்தா தனது டிஸ்பிளே பெயரை மாற்றினாராம். இந்த தகவலால் சமந்தாவின் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.

  மறுபடியும் குழப்புறாரே

  மறுபடியும் குழப்புறாரே

  குழந்தை மற்றும் படத்தின் ப்ரோமோவிற்காக வெளியிடப்பட்ட சில தகவல்களை விவாகரத்து என மாற்றி மீடியாக்களில் வதந்தி பரவி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தீயாய் பரவிக் கொண்டிருக்கும் விவாகரத்து வதந்தி பற்றி சமந்தாவோ, நாக சைதன்யாவோ இதுவரை எந்த கருத்தும் சொல்லவில்லை. இருப்பினும் பிரேக் எடுக்க போவதாக அறிவித்த சமந்தா, தற்போது மீண்டும் தெலுங்கு படங்கள் சிலவற்றிற்கு ஓகே சொல்லி வருவதாக கூறப்படுகிறது. பிரேக்கை அறிவித்த சமந்தா எதற்காக மீண்டும் படங்களில் கமிட் ஆகி வருகிறார் என ரசிகர்கள் மறுபடியும் குழப்பத்தில் உள்ளனர்.

  English summary
  The star romantic couple Samantha and Naga Chaithanya are planning to have a baby. That’s why Samantha cut down on acting in films and said she was going to take a break for a while. Samantha changed her display name for the promo of the legendary Telugu film Sakunthalam. Samantha's fans are happy with this information.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X