சமந்தா – நாக சைதன்யா விவாகரத்து அறிவிப்பை வெளியிட என்ன காரணம்? பரபரக்கும் தகவல்!
ஹைதராபாத்: நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் இணைந்து இப்படியொரு முடிவை எடுக்க என்ன காரணம் என ரசிகர்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர்.
பல்வேறு கருத்துக்கள், தகவல்கள் சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போல பரவி வருகின்றன.
ஏற்கனவே இருவரும் விரைவில் விவாகரத்து அறிவிப்பை வெளியிட போகின்றனர் என்கிற தகவல்கள் வெளியாகவும் ஏகப்பட்ட காரணங்கள் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தி ஃபேமிலி மேன் 2
இந்தி வெப்சீரிஸான தி ஃபேமிலி மேன் சீசன் 2வில் நடிகை சமந்தா ராஜி எனும் ஈழத் தமிழ் பெண்ணாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்ததற்கு எதிராக ஏகப்பட்ட கண்டனங்கள் கிளம்பின. அந்த வெப்சீரிஸில் சில போல்டான காட்சிகளில் சமந்தா நடித்தது கணவர் நாக சைதன்யா மற்றும் அவரது குடும்பத்திற்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று லேசாக புகைய ஆரம்பித்தது.

செம போல்டாக
அமேசான் பிரைமில் வெளியான தி ஃபேமிலி மேன் சீசன் 2 ஹிட்டான நிலையில், அடுத்ததாக நெட்பிளிக்ஸில் பிரம்மாண்டமாக தயாராக உள்ள வெப் தொடரில் மிகவும் போல்டாக நிர்வாண கோலத்தில் அவர் நடிக்கப் போவதாக வெளியான தகவல்கள் இந்த விவாகரத்து பிரச்சனையை மேலும், பெரிதாக்கியதாக கூறப்படுகிறது.

அனுமதி மறுப்பு
தொடர்ந்து இது போல நடிக்க வேண்டாம் என்று நாக சைதன்யாவின் குடும்பத்தார் நடிகை சமந்தாவை கட்டுப்படுத்தியதாகவும், தன்னை கட்டுப்படுத்த அவர்கள் யார் என கணவரிடம் நடிகை சமந்தா சண்டை போட்டதாகவும் இருவருக்கும் இடையே விரிசல் விழ அதுதான் காரணம் என்றும் டோலிவுட் வட்டாரங்கள் கூறி வருகின்றன.

குழந்தை வேண்டும்
ஆனால், நடிப்பு சம்பந்தமாக நாக சைதன்யாவுக்கும் சமந்தாவுக்கும் இடையே எந்தவொரு சண்டையும் நடக்கவில்லை என்றும் இருவருக்கும் இடையிலான பிரிவுக்கு முக்கிய காரணமே வாரிசு வேண்டும் என நாக சைதன்யா மற்றும் அவரது குடும்பத்தினர் விரும்பியதற்கு நடிகை சமந்தா சம்மதம் தெரிவிக்காதது தான் என்றும் கூறப்படுகிறது.

மார்க்கெட் உச்சத்தில்
நடிகை சமந்தாவின் மார்க்கெட் டோலிவுட், கோலிவுட் மற்றும் பாலிவுட் என உச்சத்தில் உள்ள நிலையில், இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்றும், கொஞ்ச காலம் ஆன பிறகு பெற்றுக் கொள்ளலாம் என்றும் அவர் கூறியதை நாக சைதன்யா ஏற்காதது தான் இந்த விரிசலுக்கு காரணம் என்றும் ஏகப்பட்ட தகவல்கள் வைரலாகி வருகின்றன.

காரணம் சொல்லவில்லை
இதில் எது நிஜம்? எது பொய் என்பது தெரியவில்லை. இன்று இருவரும் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட விவாகரத்து தொடர்பான அறிவிப்பில் இருவரும் இனி கணவன் மனைவியாக இணைந்து வாழப் போவதில்லை என்கிற முடிவுக்கு வந்து விட்டதாக மட்டுமே அறிவித்துள்ளனர். ரசிகர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் கேள்விகளுக்கு இருவரும் கூட்டாக இணைந்து விளக்கம் அளிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

4 ஆண்டு திருமண பந்தம்
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு வெர்ஷனான 'Ye Maaya Chesave' படத்தில் இருவரும் இணைந்து நடித்த நிலையில், இருவருக்கும் இடையே நல்ல நட்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மலர்ந்து கடந்த 2017ம் ஆண்டு திருமணம் ஆன நிலையில், இருவரும் தற்போது தங்களின் 4 ஆண்டு திருமண பந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











