Samantha - நாக சைதன்யாவை சமந்தா பிரிவதற்கு காரணம் இதுவா?.. பல வருடங்கள் கழித்து வெளியானது சீக்ரெட்

சென்னை: சமந்தா மையோசிடிஸ் என்னும் தோல் வியாதியால் பாதிக்கப்பட்டார். அதனையடுத்து சினிமாவிலிருந்து பிரேக் எடுத்த அவர் சாகுந்தலம் படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அடுத்ததாக குஷி படத்தில் நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே சரியாக போகவில்லை. இதனையடுத்து குட்டி பிரேக் எடுப்பதாக கூறிவிட்டு வாங்கிய அட்வான்ஸ் தொகையை கொடுத்தார். தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்தச் சூழலில் அவரது சமீபத்திய பேட்டி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சமந்தா. தமிழில் அறிமுகமாகி சூர்யா, விக்ரம், விஜய் என பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர் தெலுங்கிலும் நடிக்க ஆரம்பித்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அப்படத்தில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை காதலித்தார். சில வருடங்கள் காதலித்த அவர்கள் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம், செய்துகொண்டனர். திருமணத்துக்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடிப்பில் தீவிர கவனம் செலுத்தினார்.

Is this the reason for Samanthas breakup with Naga Chaitanya?

விவாகரத்து: சுமூகமாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக பேசி முடிவெடுத்து பிரிந்துவிட்டார்கள். திருமணத்துக்கு பிறகு சமந்தா நடித்ததால்தான் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டது. ஆனால் எதற்காக பிரிந்தோம் என்பதை இருவருமே வெளியில் சொல்லவில்லை. திருமண உறவிலிருந்து வெளியேறிய சமந்தா அதனைத் தொடர்ந்து முன்னெப்போதும் இல்லாத அளவு கவர்ச்சி காண்பித்து நடிக்க ஆரம்பித்தார்.

மையோசிடிஸ்: புஷ்பா படத்தில் அவர் ஆடிய ஆட்டம் பலரையும் கவர்ந்தது. தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு அவர் கமிட்டான சூழலில் மையோசிடிஸ் நோய் அவருக்கு வந்தது. இதன் காரணமாக பல மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை எடுத்துவந்தார். ஒருவழியாக நோயிலிருந்து மீண்ட அவர் சாகுந்தலம் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் அந்தப் படம் படுதோல்வியடைந்தது. அவரது கரியரிலேயே மோசமான தோல்வி படமாக அந்தப் படம் அமைந்துவிட்டது.

குட்டி பிரேக்: சாகுந்தலம் படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்தார். அந்தப் படமும் போதிய வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையே சினிமாவிலிருந்து குட்டி பிரேக் எடுப்பதாக கூறி தற்போது விலகியிருக்கிறார். கடந்த சில மாதங்களாக நடிக்காமல் இருக்கும் அவர் மீண்டும் விரைவில் நடிக்கவிருக்கிறார் என்று கூறப்பட்டது. அதிலும் சல்மான் கானுடன் அவர் நடிக்கலாம் என்று பேச்சு எழுந்தது.

ரீ என்ட்ரி: இந்தச் சூழலில் அவர் மீண்டும் நடிக்கவிருக்கிறார். அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அவரே சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். மேலும் பாட்காஸ்ட் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார் சமந்தா. இதற்கிடையே அவர் விரைவில் இரண்டாவது திருமணம் செய்யவிருக்கிறார் என்றும் அவரது உறவினர் பையன் ஒருவரை குடும்பத்தார் பார்த்திருக்கிறார்கள் என்றும் தகவல்கள் சிறகடித்தன.

சமந்தா பேட்டி: இந்நிலையில் திருமண வாழ்க்கை குறித்து சமந்தா பேசியிருக்கும் விஷயம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், “பொருளாதார ரீதியாக கணவரை சார்ந்து பெண்கள் இருப்பதில்லை. தங்களது தேவைகளை தாங்களே பார்த்துக்கொள்கிறார்கள். முக்கியமாக தாங்களே சம்பாதித்து ஆண்களுக்கு ஈடாக தங்களது பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள்.

சம உரிமை வேண்டும்: கணவர்கள் தங்களது மனைவிகளுக்கு சம உரிமையை கொடுக்க வேண்டும். அவர்களிடம் நண்பர் போல் பழக வேண்டும். பெண்களை அடிமைப்படுத்தக்கூடாது. ஆனால் அப்படி ஆண்கள் நடந்துகொள்ளாதபோதுதான் அந்த திருமண உறவு கஷ்டமாகிவிடுகிறது. வேறு வழியே இல்லாமல் பிரிய வேண்டிய சூழல் ஏற்படுகிறது" என்றார். இந்தப் பேட்டியை பார்த்த ரசிகர்கள், நாக சைதன்யா சமந்தாவுக்கு சம உரிமை கொடுக்காததால்தான் சமந்தா சைதன்யாவை பிரிந்தாரோ என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X