இதனால் தான் விஜய் கங்கனாவை ஜெயலலிதாவாக நடிக்க வைக்கிறாரா?
Recommended Video

மும்பை: ஜெயலலிதாவின் வாழ்க்கையும் தன் வாழ்க்கையும் ஒரே மாதிரியானது தான் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்ற பெயரில் படமாக எடுக்கிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். அந்த படத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.
இந்நிலையில் கங்கனா படம் மற்றும் ஜெயலலிதா பற்றி பேசியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது,

பட வாய்ப்பு
பிராந்திய மொழி படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்பினேன். ஏனென்றால் தமிழ்நாடு அல்லது ஆந்திராவுக்கு சென்றால் அங்குள்ள மக்கள் அப்பகுதியை சேர்ந்தவர்கள் எடுக்கும் படங்களை மட்டுமே பார்க்கிறார்கள்.

தலைவி
நல்ல வாய்ப்பு வந்தால் பிராந்திய மொழி படத்தில் நடிக்க வேண்டும் என்று காத்திருந்தேன். அந்த நேரத்தில் தான் தலைவி பட வாய்ப்பு வந்தது. என் கதையும் ஜெயலலிதாவின் கதையும் ஒரே மாதிரி தான் உள்ளது. சொல்லப் போனால் அவரின் கதை என்னுடையதை விட மிகவும் வெற்றிகரமானது.

கதை
விஜய் கதை சொன்னபோது அதற்கும் என் வாழ்க்கைக்கும் நிறைய தொடர்பு இருந்ததை உணர்ந்தேன். நான் என் வாழ்க்கை வரலாற்றை படமாக்க நினைத்த நேரத்தில் தலைவி வாய்ப்பு வந்தது. என் கதையா, அவர் கதையா என்று யோசித்தபோது ஜெயலலிதாவின் கதையில் நடிப்பது என்று முடிவு செய்தேன்.

தமிழ்
நான் இந்த படத்திற்காக தமிழ் கற்கப் போகிறேன். என் தமிழ் மோசமாக இருக்கிறது என்று இயக்குநர் நினைத்தால் வேறு யாரையாவது வைத்து டப்பிங் செய்யலாம். ஆனால் நான் தமிழ் கற்பது என்று முடிவு செய்துவிட்டேன் என்றார் கங்கனா. ஜெயலலிதா மற்றும் கங்கனாவின் வாழ்க்கை ஒரே மாதிரி இருப்பதால் தான் அவரை நடிக்க வைக்கிறாரா விஜய்?


Click it and Unblock the Notifications











