பில்லா இஷா ஷெர்மானி!

By Staff

பில்லா ரீமேக்கிற்கு விரைவில் பூஜை போடப் போகிறாகள். வெத்தலையைப் போடப் போவது அஜீத்.

ரஜினி நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சக்கை போடு போட்ட படம் பில்லா. இந்தியில் அமிதாப்பச்சன் நடிப்பில் மெகா ஹிட்படமான டான் படத்தின் ரீமேக்தான் பில்லா.

சமீபத்தில் டான் படத்தின் ரீமேக்கை ஷாருக்கான் நடிக்க எடுத்து வெளியிட்டனர். படம் பிரமாதமாகப் போகவில்லை. இப்போது பில்லாவையும்ரீமேக் செய்யவுள்ளனர்.

அஜீத் தான், ரஜினி வேடத்தில் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக நயனதாரா நடிக்கிறார். இப்போது இன்னொரு நடிகையும் புக் ஆகியுள்ளார்.அவர் இஷா ஷெர்வானி. இவர் இந்தி அழகி. முக்கியமாக கிரிக்கெட் வீரர் ஜாகிர் கானின் தற்போதைய காதலி.

ஸ்ரீபிரியா நடித்த வேடத்தில் நயனதாரா நடிப்பார் எனத் தெரிகிறது. ஒரிஜினல் படத்தில் இருந்ததைப் போலவே விறுவிறுப்பும், கிளாமரும்இப்படத்திலும் இருக்கும் என தயாரிப்பு தரப்பு கூறுகிறது.

பில்லாவில் இடம்பெற்ற வெத்தலையைப் போட்டேண்டி சக்தி கொஞ்சம் ஏறுதடி மற்றும் மை நேம் இஸ் பில்லா ஆகிய இரு பாடல்களையும்இப்படத்தில் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளார்களாம். அப்படியே இல்லாமல் ரீமிக்ஸ் பாடல்களாக இவை உருமாறி இடம் பெறுமாம்.

சிம்புவுடனான மோதலுக்குப் பிறகு தமிழ் பக்கமே வராமல் இருந்தார் நயனதாரா. தெலுங்கில் சில படங்கள் கைவசம் இருந்தாலும் அங்குஏகப்பட்ட அசெளகரியங்களாம். இதனால் பத்திரமான தமிழ் திரையுலுக்கு மீண்டும் திரும்புவதில் அவர் ஆர்வமாக உள்ளார்.

இதையடுத்து அஜீத்தை போனில் பிடித்து வாய்ப்பு கேட்டபோது, பில்லா படத்தின் நாயகியாக்கி விட்டார் அஜீத். இதற்காக அஜீத்துக்கு நிறையதேங்க்ஸ் சொன்னாராம் நயனதாரா.

பில்லா-நயனதாராவுக்கு மட்டுமல்ல, அஜீத்துக்குமே கூட முக்கியமான படம்தான்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X