18 வயதிலேயே படுக்கைக்கு அழைத்தார்.. பெரிய ஹீரோவும் என்னை கூப்பிட்டார்.. விஜய் பட நடிகை கொடுத்த ஷாக்
சென்னை: இஷா கோபிகர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானவர். அவர் தமிழில் விஜய்யுடன் நெஞ்சினிலே, அரவிந்த் சாமியுடன் என் சுவாசக்காற்றே உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். இப்போது திருமணமாகி செட்டில் ஆகியிருக்கும் அவர் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பெரிய நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்தார் என்று ஓபனாக பேசியிருக்கிறார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சினிமா என்றாலே ஆணாதிக்கம் நிறைந்தது என்ற கூற்று பல காலமாக உண்டு. அதனை உறுதிப்படுத்தும்படிதான் சினிமாவில் பணிபுரியும் பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள். பெண் இயக்குநர், பெண் ஒளிப்பதிவாளர் எல்லாம் ரொம்பவே கம்மிதான். நடிப்பில் பெண்கள் அதிக அளவு இருந்தாலும் அவர்களுக்கு உருவாக்கப்படும் பிரச்னை மற்ற பெண்களை திரைத்துறைக்குள் வருவதற்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. அப்படி உள்ள பிரச்னைகளில் தலையாய பிரச்னைதான் அட்ஜஸ்ட்மெண்ட்.

அட்ஜெஸ்ட்மெண்ட்: சினிமாவில் அறிமுகமாக வேண்டுமா, தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டுமா அதற்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தன்னுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று சிலர் ஓபனாகவும், மறைமுகமாகவும் நடிகைகளிடம் அப்ரோச் செய்யும் வழக்கம் காலங்காலமாக இருந்துவருகிறது. பெண்களுக்கு உரிமை வேண்டும் என்று குரல்கள் ஓங்கி ஒலிக்கும் இந்தக் காலத்திலும் அந்த அட்ஜஸ்ட்மெண்ட் அப்ரோச் ஓய்ந்தபாடில்லை என்பதுதான் கள எதார்த்தம்.
வாய் திறந்த நடிகைகள்: சில வருடங்களுக்கு முன்னர் எல்லாம் தங்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் அப்ரோச் வந்தால் சைலெண்ட்டாக மறுத்துவிட்டு அதனை பொதுவெளியில் சொல்லாமல் இருந்தார்கள் நடிகைகள். இப்போது பலரும் அதுகுறித்து வெளிப்படையாக பேசிவருகிறார்கள். அது ஆரோக்கியமான விஷயமான ஒன்றகாவே பார்க்கப்படுகிறது. லேடி சூப்பர் ஸ்டார் நயன், நடிகை வரலட்சுமி உள்ளிட்டோரும் தங்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் அப்ரோச் வந்ததாக ஓபனாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இஷா கோபிகர்: இந்நிலையில் விஜய்யுடன் நெஞ்சினிலே, அரவிந்த்சாமியுடன் என் சுவாசக்காற்றே உள்ளிட்ட படங்களில் நடித்த இஷா கோபிகரும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பேசியிருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், "18 வயதில் நான் இருக்கும்போதே ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். அதேபோல் மேனேஜர்கள் என்னை தவறான முறையில் தொட்டு நடிகர்களுடன் நட்பாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அது அற்பமான செயல். சிலர் எனது தோள் பட்டையை தகாத முறையில் அழுத்தியிருக்கின்றனர்.
ஹீரோவின் முகத்திரை:நான் நடித்துக்கொண்டிருந்தபோது உச்சத்தில் இருந்த ஒரு ஹீரோ என்னை தனியாக சந்திக்கும்படி கூறினார். என்னுடன் எனது ஓட்டுநரோ அல்லது வேறு யாரோ இருக்கக்கூடாது என்றும்; எனக்கும் சில நடிகைகளுடன் தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவுகின்றன. எனவே நாம் இருவரும் சந்திப்பதை வேறு யாரும் பார்க்கக்கூடாது என்றும் கூறினார். அவரது நோக்கம் எனக்கு புரிந்துவிட்டது. எனவே அவரை தனியாக சந்திக்க மறுத்துவிட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications