Plane Crash: நெஞ்சினிலே ஹீரோயினை ஞாபகமிருக்கா?.. அகமதாபாத் விமான விபத்துக்கு வீடியோ மூலம் இரங்கல்

மும்பை: உலகத்தையே உலுக்கியுள்ள அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து சம்பவத்துக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விமானத்தில் பயணித்த 240 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. ஒருவர் மட்டும் பலத்த காயத்துடன் உயிர் தப்பியிருக்கிறார். மருத்துவமனை ஹாஸ்டலில் விமானம் மோதிய நிலையில், அங்கேயும் 20க்கு மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்படியொரு கோர விபத்து பலரையும் தூங்க விடாமல் செய்து வரும் நிலையில், தளபதி விஜய், கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி, அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா, நடிகை குஷ்பு, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Isha Koppikar shares an heartfelt condolence video for Ahmedabad Plane Crash incident
Photo Credit:

இந்நிலையில், தமிழில் விஜய்யுடன் நெஞ்சினிலே, கடைசியாக சிவகார்த்திகேயனுடன் அயலான் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை இஷா கோபிகர்

யாரு இந்த இஷா கோபிகர்: 1998ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் டோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் இஷா கோபிகர். அதே ஆண்டு தமிழில் பிரசாந்த் நடிப்பில் வெளியான காதல் கவிதை படத்தின் மூலம் கோலிவுட்டிலும் அறிமுகமானார். அதற்கு அடுத்த ஆண்டு என் சுவாசக் காற்றே, விஜய்யுடன் நெஞ்சினிலே மற்றும் ஜோடி (ஸ்பெஷல் கேமியோ) உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பாப்புலரானார்.

விஜயகாந்துடன் நரசிம்மா: கடைசியாக தமிழில் ஹீரோயினாக விஜயகாந்தின் நரசிம்மா படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர், பாலிவுட்டுக்கு சென்று செட்டில் ஆன இஷா கோபிகர் தொடர்ந்து இந்தி படங்களில் மட்டுமே நடித்து வந்தார். 2011ம் ஆண்டுக்குப் பிறகு நடிப்புக்கு சின்ன பிரேக் கொடுத்தார்.

கணவருடன் விவாகரத்து: 2009ம் ஆண்டு டிம்மி நரங் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட இஷா கோபிகருக்கு மகள் உள்ளார். கடந்த 2023ம் ஆண்டு கணவரை விவாகரத்து பெற்று பிரிந்தார். கடைசியாக சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் நடிப்பில் வெளியான அயலான் படத்தில் வில்லியாக நடித்திருந்தார்.

விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் ஆத்மா சாந்தியடையட்டும்: நேற்று தனது மகளுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட இஷா கோபிகர் தற்போது அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் என உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சினிமா பிரபலங்கள் பலரும் ட்வீட் போட்டு வரும் நிலையில், நெஞ்சினிலே பட நாயகி கனத்த நெஞ்சத்துடன் வீடியோவை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X