»   »  கவர்ச்சியால் நின்ற இஷாவின் திருமணம்

கவர்ச்சியால் நின்ற இஷாவின் திருமணம்

Subscribe to Oneindia Tamil

திருமணத்திற்குப் பிறகும் கவர்ச்சியாக நடிப்பேன் என்று கூறியதால் நடிகை இஷா கோபிகரின் திருமணப் பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதாம்.

அகத்தியனின் "காதல் கவிதை என்ற படத்தில் அறிமுகமானவர் மும்பை கட்டழகி இஷா கோபிகர். இந்தப் படத்தில்பிரஷாந்துடன் இவர் நடித்திருந்தார். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற இயக்குனரின் படத்தில் நடித்த போதும் அவரால்கோலிவுட்டில் அவ்வளவாக பெயர் வாங்க முடியவில்லை.

இதற்குப் பிறகு அரவிந்த் சாமியுடன் "என் சுவாசக் காற்றே, விஜய்யுடன் "நெஞ்சினிலே என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தபோதிலும் தமிழ் ரசிகர்களின் மனதில் அவரால் இடம் பிடிக்க முடியவில்லை.

இதனால் இடையிடையே சில கன்னடம் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்தார். அங்கும் அவரை துரதிர்ஷ்டம் விடவில்லை.எனவே தனது விதியை நொந்தபடி மீண்டும் மும்பைக்கே பொட்டியைக் கட்டினார்.

இந்தியில் கவர்ச்சிக்குத் தானே முக்கிய இடம். இதனால் தன்னுடைய பங்கிற்கு இஷாவும் கவர்ச்சியை அள்ளித் தெளித்தார்.இதனால் இப்போது இஷா, பாலிவுட்டில் டாப் கிளாமரஸ் நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.

இந்த சமயத்தில் தான் இஷா கோபிகருக்கும், மும்பையிலுள்ள ஒரு பிரபல தொழிலதிபருக்கும் திருமணப் பேச்சுவார்த்தைநடந்தது. திருமணத்தை நிச்சயிப்பதற்காக இருவரது வீட்டாரும் கலந்து பேசினார்கள். இதனால் இஷாவுக்கு விரைவில் திருமணம்நடக்கப் போகிறது என்று பாலிவுட்டில் பரபரப்பாக பேச்சும் அடிபட்டது.

ஆனால் பரவிய வேகத்திலேயே இந்த பரபரப்பு செய்தி புஸ்வாணமானது. இதற்கு என்ன காரணம் என்று விசாரித்த போது சிலபரபரப்பு செய்திகள் காதில் விழுந்தன.

இந்த திருமணப் பேச்சுவார்த்தை முறிவதற்கே இஷா தான் காரணமாம். அது எப்படி என்று தானே கேட்கிறீர்கள்.

இப்போது இஷா ஒன்றிரண்டு இந்திப் படங்களில் தான் ஹீரோயினாக நடித்து வருகிறார். இதனால் அவரை ஒரேயொருகுத்தாட்டப் பாடலுக்கு மட்டும் ஆடும்படி கேட்டுள்ளார்கள். இதற்கு இஷாவும் ஓகே சொன்னார். இதனால் வரிசையாக சிலபடங்களில் இவர் கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ளார்.

இதற்கு நல்ல வரவேற்பும், வருமானமும் கிடைக்கவே தனது ரூட்டை அப்படியே மாற்றி விட்டார். இஷாவின் இந்த திடீர் கவர்ச்சிப்புரட்சி மாப்பிள்ளை வீட்டாருக்கு பிடிக்கவில்லையாம்.

கவர்ச்சி ஆட்டத்தை நிறுத்தும் படி வேண்டுகோள் விடுத்துப் பார்த்தனர். ஆனால் இஷா கேட்பதாக இல்லை. திருமணத்திற்குப்பின்னரும் இப்படித்தான் என்னுடைய ஆட்டம் தொடரும் என்று கூறியுள்ளார்.

இதனால் மாப்பிள்ளை வீட்டார் கோபித்துக் கொண்டு போய் விட்டார்களாம். இது தான் இஷாவின் திருமணம் நின்றதற்குகாரணம்.

துணிந்தவனுக்கு துக்கமில்லை!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil