தமிழில் மீண்டும் வாய்ப்பு தேடும் இஷா இதுவரை பல மொழிப் படங்களில் நடித்துள்ளேன். ஆனால் தமிழ் சினிமாதான் ரொம்ப நாகரீகமானது, தேவையில்லாததொந்தரவு செய்யாதது என்று தமிழ் திரையுலகை புகழ்ந்து தள்ளியுள்ளார் இஷா கோபிகர்.இஷா கோபிகரை தமிழ் ரசிகர்கள் லேசாக மறந்திருக்கலாம். மும்பையைச் சேர்ந்த இந்த அல்ட்ரா மாடர்ன் ஐஸ்கிரீம் தமிழில் காதல்கவிதை என்ற படம் மூலம் அறிமுகமானார், பிரஷாந்துக்கு ஜோடியாக.ஆனால், படம் ஓடாததால் அவர் யாருக்கும் தெரியாமல் போய்விட்டார். இதையடுத்து அரவிந்த்சாமியுடன் என் சுவாசக் காற்றேபடத்தில் நடித்தார். இதனால் ஓரளவுக்கு வெளியில் தெரிந்தார்.தொடர்ந்து நெஞ்சினிலே என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், மூத்த நடிகர் விஜய்காந்துக்கு ஜோடியாக நரசிம்மாவிலும்நடித்தார். அத்தோடு தமிழில் அவருக்கு சினிமா சான்ஸ் மூடு விழா கண்டுவிட்டது. ஆனாலும் சளைக்காத இஷா தெலுங்கில் கொஞ்ச நாள் ஆட்டம் போட்டுவிட்டு மீண்டும் தனது சொந்த ஊரான மும்பைக்கேபோனார். அவரைத் தேடி ரெக்ஸோனா, பாண்ட்ஸ், கேமே சோப்புகள், அழகு சாதன விளம்பரங்கள் குவிந்தன.அப்படியே இந்தி சினிமாவிலும் நுழைந்துவிட்டார். போன வேகத்தில் இந்தி ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாதஅளவுக்கு கிளாமர் குயீனாக மாறியிருக்கிறார். தமிழ் குத்துப்பாட்டு என்றால் ரகஸ்யாவும், நமீதாவும் எப்படி தவிர்க்கமுடியாதவர்களோ அதுபோல இந்தியில் ஆகிவிட்டார் இஷா.அவரது குத்துப்பாட்டுக்கு அங்கு அத்தனை டிமாண்ட். கூடவே கவர்ச்சியைப் பிழிந்து காயப் போட்டுவிடுகிறார்.இவரும் அம்ரிதா அரோராவும் சேர்ந்து லெஸ்பியன் ரோலில் நடித்த கேர்ள்ஸ் பிரண்ட் படத்தின் மூலம் எங்கோயோபோய்விட்டார் இஷா. இப்போதும் ரேம்ப் ஷோ, மும்பை பார்ட்டிகளில் மிகப் பிரபலமான முகமாகக் காட்சியளிக்கும் இஷாவுக்குவெறும் கவர்ச்சியோடு சினிமா வாழ்வை முடித்துக் கொண்டு போகப் பிரியமில்லையாம். அவரது மனதில் இன்னும் தமிழ் சினிமாதான் நிழலாடி வருகிறதாம். அதை அவரது வாயாலேயே கேட்போமே .. நான் பலமொழிப் படங்களில் நடித்து விட்டேன். தமிழ், தெலுங்கு, இந்தி என நான் நிடித்தப் படங்கள் பல. ஆனாலும் இன்னும் என்னைக்கவர்ந்த ஃபீல்ட் கோலிவுட் தான்.தமிழில் நான் காதல் கவிதை மூலம் அறிமுகமானேன். அகத்தியன் தான் எனக்குப் பிடித்த இயக்குனர். அவர் கூப்பிட்டதால் காதல்கவிதையில் நடித்தேன். அந்தப் படத்தின் கதை என்னை மிகவும் கவர்ந்தது. துரதிர்ஷ்டவசமாக படம் சரியாக போகாததால், நான்ராசியில்லாத நடிகை வரிசையில் சேர்ந்து விட்டேன்.ஆனாலும் கூட என் சுவாசக் காற்றே, நெஞ்சினிலே என மேலும் இரு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப்படங்களின் கதையும் கூட சிறந்தவைதான். துரதிர்ஷ்டவசமாக எனக்கு அதற்குப் பிறகு படங்கள் கிடைக்கவில்லை.தயாரிப்பாளர்கள் என்னை நடிகையாக கருதவில்லையோ என்னவோ. அதற்குப் பிறகுதான் நான் இந்தியில் பிரபலமானேன். இருந்தாலும், தமிழ் சினிமாதான் எனக்கு நல்ல பாதை போட்டுக்கொடுத்தது. மிகவும் சுதந்திரமாக என்னால் தமிழ்ப் படங்களில் நடிக்க முடிந்தது. ஜெட் வேகத்தில் படம் எடுப்பவர்கள் தமிழ்சினிமாக்காரர்கள். ஆனால் இந்தியில் இந்த வேகத்தை பார்க்க முடியாது.இப்போது பரதம் கற்றுக் கொண்டிருக்கிறேன். விரைவில் அரங்கேற்றம் செய்யப் போகிறேன். மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கஆர்வமாக உள்ளேன். தயாரிப்பாளர்கள்தான் அதற்கு மனசு வைக்க வேண்டும்.எத்தனை மொழிப் படங்களில் நடித்தாலும் தமிழ்ப் படங்களில் நடித்தால் அது தனி சுகம்தான். நல்ல பல மனிதர்கள் அங்குதான்இருக்கிறார்கள். எனவே தமிழ்ப் பட வாய்ப்பு வந்தால் நிச்சயம் ஒத்துக் கொள்வேன் என்று தனது மனக் கிடக்கையை கொட்டித்தீர்த்துள்ளார் இஷா.மனசு வையுங்களேன் கோலிவுட் மகாராஜாக்களே!

By Staff
இதுவரை பல மொழிப் படங்களில் நடித்துள்ளேன். ஆனால் தமிழ் சினிமாதான் ரொம்ப நாகரீகமானது, தேவையில்லாததொந்தரவு செய்யாதது என்று தமிழ் திரையுலகை புகழ்ந்து தள்ளியுள்ளார் இஷா கோபிகர்.

இஷா கோபிகரை தமிழ் ரசிகர்கள் லேசாக மறந்திருக்கலாம். மும்பையைச் சேர்ந்த இந்த அல்ட்ரா மாடர்ன் ஐஸ்கிரீம் தமிழில் காதல்கவிதை என்ற படம் மூலம் அறிமுகமானார், பிரஷாந்துக்கு ஜோடியாக.

ஆனால், படம் ஓடாததால் அவர் யாருக்கும் தெரியாமல் போய்விட்டார். இதையடுத்து அரவிந்த்சாமியுடன் என் சுவாசக் காற்றேபடத்தில் நடித்தார். இதனால் ஓரளவுக்கு வெளியில் தெரிந்தார்.

தொடர்ந்து நெஞ்சினிலே என்ற படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும், மூத்த நடிகர் விஜய்காந்துக்கு ஜோடியாக நரசிம்மாவிலும்நடித்தார். அத்தோடு தமிழில் அவருக்கு சினிமா சான்ஸ் மூடு விழா கண்டுவிட்டது.

ஆனாலும் சளைக்காத இஷா தெலுங்கில் கொஞ்ச நாள் ஆட்டம் போட்டுவிட்டு மீண்டும் தனது சொந்த ஊரான மும்பைக்கேபோனார். அவரைத் தேடி ரெக்ஸோனா, பாண்ட்ஸ், கேமே சோப்புகள், அழகு சாதன விளம்பரங்கள் குவிந்தன.

அப்படியே இந்தி சினிமாவிலும் நுழைந்துவிட்டார். போன வேகத்தில் இந்தி ரசிகர்களால் அவ்வளவு சீக்கிரத்தில் மறக்க முடியாதஅளவுக்கு கிளாமர் குயீனாக மாறியிருக்கிறார். தமிழ் குத்துப்பாட்டு என்றால் ரகஸ்யாவும், நமீதாவும் எப்படி தவிர்க்கமுடியாதவர்களோ அதுபோல இந்தியில் ஆகிவிட்டார் இஷா.

அவரது குத்துப்பாட்டுக்கு அங்கு அத்தனை டிமாண்ட். கூடவே கவர்ச்சியைப் பிழிந்து காயப் போட்டுவிடுகிறார்.

இவரும் அம்ரிதா அரோராவும் சேர்ந்து லெஸ்பியன் ரோலில் நடித்த கேர்ள்ஸ் பிரண்ட் படத்தின் மூலம் எங்கோயோபோய்விட்டார் இஷா. இப்போதும் ரேம்ப் ஷோ, மும்பை பார்ட்டிகளில் மிகப் பிரபலமான முகமாகக் காட்சியளிக்கும் இஷாவுக்குவெறும் கவர்ச்சியோடு சினிமா வாழ்வை முடித்துக் கொண்டு போகப் பிரியமில்லையாம்.

அவரது மனதில் இன்னும் தமிழ் சினிமாதான் நிழலாடி வருகிறதாம். அதை அவரது வாயாலேயே கேட்போமே .. நான் பலமொழிப் படங்களில் நடித்து விட்டேன். தமிழ், தெலுங்கு, இந்தி என நான் நிடித்தப் படங்கள் பல. ஆனாலும் இன்னும் என்னைக்கவர்ந்த ஃபீல்ட் கோலிவுட் தான்.

தமிழில் நான் காதல் கவிதை மூலம் அறிமுகமானேன். அகத்தியன் தான் எனக்குப் பிடித்த இயக்குனர். அவர் கூப்பிட்டதால் காதல்கவிதையில் நடித்தேன். அந்தப் படத்தின் கதை என்னை மிகவும் கவர்ந்தது. துரதிர்ஷ்டவசமாக படம் சரியாக போகாததால், நான்ராசியில்லாத நடிகை வரிசையில் சேர்ந்து விட்டேன்.

ஆனாலும் கூட என் சுவாசக் காற்றே, நெஞ்சினிலே என மேலும் இரு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப்படங்களின் கதையும் கூட சிறந்தவைதான். துரதிர்ஷ்டவசமாக எனக்கு அதற்குப் பிறகு படங்கள் கிடைக்கவில்லை.தயாரிப்பாளர்கள் என்னை நடிகையாக கருதவில்லையோ என்னவோ.

அதற்குப் பிறகுதான் நான் இந்தியில் பிரபலமானேன். இருந்தாலும், தமிழ் சினிமாதான் எனக்கு நல்ல பாதை போட்டுக்கொடுத்தது. மிகவும் சுதந்திரமாக என்னால் தமிழ்ப் படங்களில் நடிக்க முடிந்தது. ஜெட் வேகத்தில் படம் எடுப்பவர்கள் தமிழ்சினிமாக்காரர்கள். ஆனால் இந்தியில் இந்த வேகத்தை பார்க்க முடியாது.

இப்போது பரதம் கற்றுக் கொண்டிருக்கிறேன். விரைவில் அரங்கேற்றம் செய்யப் போகிறேன். மீண்டும் தமிழ்ப் படங்களில் நடிக்கஆர்வமாக உள்ளேன். தயாரிப்பாளர்கள்தான் அதற்கு மனசு வைக்க வேண்டும்.

எத்தனை மொழிப் படங்களில் நடித்தாலும் தமிழ்ப் படங்களில் நடித்தால் அது தனி சுகம்தான். நல்ல பல மனிதர்கள் அங்குதான்இருக்கிறார்கள். எனவே தமிழ்ப் பட வாய்ப்பு வந்தால் நிச்சயம் ஒத்துக் கொள்வேன் என்று தனது மனக் கிடக்கையை கொட்டித்தீர்த்துள்ளார் இஷா.

மனசு வையுங்களேன் கோலிவுட் மகாராஜாக்களே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X