புது புது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றும் …ஐஸு!
சென்னை: தமிழ் படம் 2 புகழ் ஐஸ்வர்யா மேனன் ஹாட்டான புது புது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
தமிழ் சினிமாவில் தமிழ் படம் 2 மூலம் நமக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். இதற்கு முன்பு பல தமிழ் படங்களில் நடித்தாலும் இந்த படம் தான் இவரை தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பெற செய்தது.

தமிழில் தனது திரை பயணத்தை தொடங்கிய ஐஸ்வர்யா மேனன் முதல் திரைப்படமாக சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி படத்தில் நடித்தார், இப்படம் தெலுங்கில் லவ் ஃபெயிலியர் என்ற பெயரில் ரீமேக் செய்து வெளிவந்தது அதிலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இவரே நடித்துள்ளார்.

பின்னர் கன்னட திரையுலகில் கால் பதித்தார் ஐஸ்வர்யா, தாஸாவால படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக வரும் கதாபாத்திரம் இவருக்கு பாராட்டுக்களை பெற்று தந்தது.

பின்னர் பல தமிழ் மற்றும் கன்னட படங்களில் தொடர்ந்து நடித்தார் ஐஸ்வர்யா மேனன். மலையாள சினிமாவில் பகத் பாசில் நடித்த படமான மாண்சூன் மேங்கோஸ் படத்தில் அறிமுகமானார்.

தற்போது பிசியாக இருக்கும் இவர் அவ்வப்போது புது புது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் தற்போது எடுத்த ஹாட் போட்டோஷுட் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் டிரென்டிங் ஆக உள்ளது. இதில் வெள்ளை நிற ஆடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா மேனன். இதனை பார்க்கும் அவரது ரசிகர்கள் சூடேறி வருகின்றனர்.
தென்னிந்திய மொழி படங்களில் அனைத்திலும் நடித்துள்ள ஐஸ்வர்யா. தற்போது இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் நான் சிரித்தால் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்புகள் ஓரளவு முடிந்து விட்டதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











