உங்களுக்கும் இது ரெண்டாவது கல்யாணம் தானே? சம்யுக்தாவை மாதம்பட்டி ரங்கராஜ் முன் வைத்து கலாய்த்த கணவர்

சென்னை: நடிகை சம்யுக்தா சண்முகநாதன் சில மாதங்களுக்கு முன்னர் கிரிக்கெட் வீரர் அனிருதா ஸ்ரீகாந்த்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர்கள் இருவருக்குமே இந்த திருமணம் இரண்டாவது திருமணம். இவர்களின் முதல் திருமணம் கருத்து வேறுபாட்டால் விவாகரத்தில் முடிந்தது. இதில் சம்யுக்தாவுக்கு மகன் ஒருவர் உள்ளார்.

இவர்கள் திருமணம் குறித்து அனிருதா ஸ்ரீகாந்த்தின் தந்தை பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் இருவரிடத்திலும் உங்கள் இருவருக்கும் ஏற்கனவே திருமணம் நடைபெற்று விவாகரத்து ஆகியுள்ளது. இருவருக்குமே இந்த திருமணம் இரண்டாவது திருமணம், எனவே இந்த திருமணத்தை செய்து கொள்ளலாமா? வேண்டாமா என்பதை முன்கூட்டியே நன்கு யோசித்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள். திருமணம் செய்து கொண்ட பின்னர் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு அதனால் நாங்கள் பிரிகிறோம் என்று பிரியாதீர்கள். உங்கள் வாழ்க்கையில் மூன்றாவது திருமணம் என்ற ஒரு விஷயத்தை யோசித்துப் பார்க்காதீர்கள். அது மிகவும் கொடுமையானதாக இருக்கும் என்று இருவருக்குமே அறிவுரை கூறியுள்ளார். இது தொடர்பாக சம்யுக்தா சண்முகநாதன் அவரது திருமணத்திற்கு பிறகான பேட்டி ஒன்று மிகவும் அழகாக பகிர்ந்திருந்தார்.

Isn t This Your Second Marriage Too Anirudha Srikkanth Teases Samyuktha on Cook With Comali 7

இவர்களின் திருமண புகைப்படம், ஹனிமூன் புகைப்படம் போன்ற பல புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இந்நிலையில் இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 7ல் போட்டியாளர்களாக கலந்து கொண்டிருக்கின்றார்கள். அப்போது இவர்கள் இருவரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்க வந்தார், போட்டியின் நடுவர்களில் ஒருவரான சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ்.

கலாய்: மாதம்பட்டி ரங்கராஜ் சமையல் எல்லாம் எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்ப, அதற்கு அனிருதா ஸ்ரீகாந்த் எனக்கு சமையல் எல்லாம் செய்ய தெரியாது, இதுபோல சின்ன சின்ன உதவிகள் மட்டும் செய்ய தெரியும் என்று கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியின் விதிப்படி எனக்கு சமையலே தெரிந்திருக்கக் கூடாது என்றனர், அதனால் தான் எனது மனைவி என்னை அழைத்து வந்தார். உடனே சம்யுக்தாவை நோக்கி நீங்கள் அப்படித்தான் சொல்லி அழைத்தீர்களா என்று கேட்டார். அதற்கு சம்யுக்தாவும் ஆமாம் நான் முதலில் அழைத்ததற்கு வரமாட்டேன் என்று கூறினார். ஐபிஎல் இருக்கிறது, அது இருக்கிறது, இது இருக்கிறது என்றெல்லாம் கூறினார். மேலும் கணவரை நிகழ்ச்சிக்கு அழைத்து வர வேண்டும் என்று கூறியதால் இவரை அழைத்து வந்தேன்.

Isn t This Your Second Marriage Too Anirudha Srikkanth Teases Samyuktha on Cook With Comali 7

இரண்டாவது இன்னிங்ஸ்: சம்யுக்தா இவ்வாறு கூறியதும் அனிருதா ஸ்ரீகாந்த்தை நோக்கி, இதே போல் கிரிக்கெட்டில் மனைவியை அழைத்து வருவது கட்டாயம் என்று கூறினால் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டதற்கு, அவர் கொஞ்சம் கூட யோசிக்காமல் நான் கிரிக்கெட் விளையாடுவதிலேயே விட்டுவிடுவேன் என்று கூறினார். உடனே அனைவரும் சிரிக்க, சம்யுக்தா அனிருதா ஸ்ரீகாந்த்தை நோக்கி, பார்த்துப்பா இரண்டாவது கல்யாணம் மூன்றாவது கல்யாணமா மாத்திடாதே என்று கூறினார். உடனே பதிலுக்கு அனிருதா ஸ்ரீகாந்த் 'ஹலோ மேடம் நீங்க மட்டும் என்னமோ ஃபர்ஸ்ட் இன்னிங்ஸ் விளையாடுவது போல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள், நீங்களும் என்னைப்போல் இரண்டாவது இன்னிங்ஸ்தான்' என்று நக்கலாக பதில் அளித்தார். இது தொடர்பான வீடியோவை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவாக விஜய் டிவி பகிர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X